இப்படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் இருந்து ஹாரிஸ் ஜெயராஜ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி அரசியல்வாதியாக நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டிருக்கிறது.

சட்டசபையில் ரவி மோகன் பேசும் காட்சிகளுடன் வெளியான இந்த டீசரின் இறுதியில் இப்படத்தின் பெயர் ‘கராத்தே பாபு’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் டவ்டே ஜிவால் நாயகியாக நடிக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், நாசர், விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது வெளியாகியிருக்கும் இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.