Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்

Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி – ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்


நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, அவரின் கணவர் விசாகனும் பல்வேறு வேண்டுதல்களுடன் முக்கிய கோயில்களுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

IMG 20250309 121635 Thedalweb Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்
சௌந்தர்யா-விசாகன்

அந்த வகையில் தென் மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்ய வந்தவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள திருவண்ணாமலை ஆதீனம் ஐந்து கோயில் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் வழிபட்டனர்.

நீண்ட நேரம் கோயிலில் இருந்தவர் பின்பு கோயிலின் வரலாறு, சிறப்புகள் பற்றி அங்கிருந்த பரம்பரை சிவாச்சாரியாரிடம் கேட்டு தெரிந்துகொண்டனர்.

IMG20250309121618 Thedalweb Rajinikanth: கள்ளழகர் கோயில், 18-ஆம் படி கருப்பணசுவாமி - ரஜினி மகளின் ஆன்மிகப் பயணம்
அழகர் கோயிலில்

அதைத் தொடர்ந்து மதுரை வந்த சௌந்தர்யா-விசாகன் தம்பதியினர் அழகர்மலைக்கு வந்து கள்ளழகர் கோயில், பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் வழிபட்டவர்கள், பின்பு அங்குள்ள 18-ஆம் படி கருப்பணசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். அவர்களுக்கு அர்ச்சகர்கள் மாலை, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.

சௌந்தர்யா – விசாகன் தம்பதி கோயிலுக்கு வந்த செய்தி அறிந்து ரஜினி ரசிகர்களும், பொதுமக்களும் அழகர் கோயிலில் கூடிவிட்டனர். பின்பு அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டன ர்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *