null
Pongal Telecasting: பொங்கலுக்கு  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்... என்னென்ன?

Pongal Telecasting: பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்… என்னென்ன?


பண்டிகை விடுமுறை தினங்களில் சினிமாதான் முக்கியமானதொரு என்டர்டெயின்மென்ட்.

அன்றைய தினத்தில் வெளியாகும் திரைப்படங்களைப் திரையரங்குகளில் பார்த்துவிட்டு, பலரும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் படங்களைப் பார்க்கதான் விசிட் அடிப்பார்கள்.

அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிக்கைக்கு கடந்தாண்டு நம்மை ஈர்த்த பல திரைப்படங்களும் தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகவிருக்கின்றன.

image%20(21) Thedalweb Pongal Telecasting: பொங்கலுக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய திரைப்படங்கள்... என்னென்ன?
The Greatest of All Time

விஜய் டி.வி- யில் இந்தாண்டு பொங்கல் பண்டிக்கைக்கு மதியம் 12.30 மணிக்கு `வாழை’ திரைப்படமும், மாலை 6.00 மணிக்கு சிவகார்த்திகேயனின் `அமரன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகிறது. ஜனவரி 15-ம் தேதி காலை 11.30 மணிக்கு சுந்தர்.சி-யின் `அரண்மனை 4′ திரைப்படமும், மதிய, 3.00 மணிக்கு கோலிவுட், டோலிவுட் எனப் பல இடங்களிலும் ஹிட்டடித்த `மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படமும், மாலை 6.00 மணிக்கு கார்த்தியின் `மெய்யழகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளது.

இதுமட்டுமல்ல, சன் டி.வி-யில் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 14-ம் தேதி மாலை 6.30 மணிக்கு ரஜினியின் `வேட்டையன்’ திரைப்படமும், ஜீ தமிழில் ஜனவரி 12-ம் தேதி மாலை 6.30 மணிக்கு விஜய்யின் `தி கோட்’ திரைப்படமும் ஒளிபரப்பாகவுள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *