PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!

PM Modi – kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!


பாலிவுட்டில் 1935-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகனாக உருவெடுத்து புகழ் பெற்ற நடிகரானார் ராஜ் கபூர். நடிகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட இவருக்கு 1988-ம் ஆண்டு இந்திய திரைத்துறையில் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது இந்திய அரசால் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ராஜ் கபூரின் நூற்றாண்டு விழா நாளை முதல் 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் 14-ம் தேதி பிரதமர் மோடி இதில் கலந்துகொள்ள வேண்டும் என ராஜ் கபூரின் குடும்பத்தினர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Thedalweb PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!
கபூர் குடும்பத்துடன் மோடி

இந்த சந்திப்பில், ராஜ் கபூரின் மகள் ரீமா ஜெயின், மருமகள் நீது கபூர், பேரக்குழந்தைகள் – நடிகர்கள் கரிஷ்மா கபூர், கரீனா கபூர் அவரின் கணவர் சைஃப் அலிகான், ரன்பீர் கபூர் அவரின் மனைவி ஆலியா பட், ஆதார் ஜெயின், அர்மான் ஜெயின், ரித்திமா கபூர் சாஹ்னி, அர்மான் ஜெயின், நீது கபூர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அப்போது பிரதமர் மோடி, “ சினிமா என்பது மென்மையான சக்தி (soft power). அதுப்பற்றி சமீபமாகதான் பேசுகிறோம். ஆனால், இந்த சொற்றொடர் கூட இல்லாத நேரத்தில், ராஜ் கபூர் இந்தியாவின் மென்மையான சக்தியை உலகம் முழுவதும் நிறுவினார். இது இந்தியாவுக்கு அவர் செய்த பெரிய சேவை.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோர் ஜனசங்க காலத்தில், டெல்லியில் தேர்தல் நடந்து, அதில் தோற்றுவிட்டார்கள். அப்போது இருவரும் ‘தேர்தலில் தோற்றோம், இப்போது என்ன செய்யலாம்… ஒரு படம் பார்க்கலாமா?’ என இருவரும் ஒரு திரைப்படத்தைப் பார்க்கச் சென்றனர், அது ராஜ் கபூரின் ‘ஃபிர் சுபா ஹோகி’ (ஒரு புதிய காலை). ஒரு சீனப் பயணத்தின் போது, ​​ராஜ் கபூரின் திரைப்படங்களின் பாடல்களை தொகுப்பாளர்கள் இசைத்தனர். நான் அதை மொபைலில் பதிவு செய்யும்படி எனது குழுவைக் கேட்டுக் கொண்டேன். அதை ரிஷி கபூருக்கும் அனுப்பினேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

GefqQbrWQAAy7Ij Thedalweb PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!
கபூர் குடும்பத்துடன் மோடி

ராஜ் கபூர் மற்றும் அவரது படங்களின் உலகளாவிய தாக்கத்தை காட்சி வடிவத்தில் பதிவு செய்ய வேண்டும். மத்திய ஆசிய மக்களின் வாழ்க்கையில் அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதை நாம் மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புதிய தலைமுறையையும் இதில் இணைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்புக்குப் பிறகு நடிகர் ரன்பீர் கபூர், “பிரதமருடன் நாங்கள் உரையாடும்போது, நிறைய தனிப்பட்ட கேள்விகளைக் கேட்டோம். அவர் எங்களுடன் மிகவும் நட்பாகப் பேசினார். பிரதமரை சந்தப்பதற்கு முன் மிகவும் பதட்டமாக இருந்தோம். ஆனால் அவர் மிகவும் நல்லவராகவும், எங்களுடன் யதார்த்தமாகவும் இருந்தார். அவருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

GefqQbsWoAA6Y0R Thedalweb PM Modi - kapoor family: ராஜ் கபூர் நினைவுகளை அவர் குடும்பத்தினருடன் பகிர்ந்த பிரதமர் மோடி!
கபூர் குடும்பத்துடன் மோடி

நடிகை கரீனா கபூர் கான், “பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்து அவருடன் பேச வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அவரது ஆற்றல் மிகவும் நேர்மறையானது. உண்மையிலேயே அவர் ஒரு உலகளாவிய தலைவர்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். நடிகை ஆலியா பட், “அவர் எங்களை வரவேற்ற விதம், ராஜ் கபூரைப் பற்றி அவர் பேசிய விதம், ராஜ் கபூரை உலகிற்குக் கற்பிக்க நாம் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவர் நிறைய யோசனைகளையும் பரிந்துரைகளையும் வழங்கியது மிகவும் பிடித்திருந்தது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *