Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்

Parasakthi: “பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்…" – பார்த்திபன்


ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்

தன்னுடைய படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னுடைய படம் தொடர்பாகவே அமைச்சரை சந்தித்தேன். `54-வது பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என்று ஒரு திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறேன். அதன் படப்பிடிப்பு 90 சதவிகிதம் புதுச்சேரியில்தான் நடைபெற இருக்கிறது. அதற்காக அரசின் ஒத்துழைப்பு வேண்டும் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன்.

WhatsApp Image 2024 10 27 at 9 00 14 PM Thedalweb Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்
தவெக தலைவர் விஜய்

அதை அவர் ஏற்றுக்கொண்டு, `அரசு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்கிறேன்’ என்று கனிவுடன் கூறினார். இது காதலை மையமாகக் கொண்ட திரைப்படம். அதேபோல என்னுடைய படத்தில் எப்போதும் கதாநாயகன் நான்தான்” என்றவரிடம், நடிகர் விஜய்யின் அரசியல் வரவு குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

விஜய் செல்லும் பாதை சரியானதுதான்

அப்போது, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். கட்சி தொடங்கலாம். முதல்வராகவும் ஆசைப்படலாம். அதில் எந்த தவறும் கிடையாது. அப்படி வருபவர்களை வரவேற்க வேண்டும். ஆனால் புதிதாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தும்போது அதற்கு பல தடைகள் நிச்சயம் இருக்கும். பல தடைகளைத் தாண்டித்தான் ஜல்லிக்கட்டில் மாடுகளைப் பிடிக்கமுடியும் என்று இருக்கும்போது, அரசியலில் ஆட்சியைப் பிடிப்பதென்பது பெரிய விஷயம். எனவே நடிகர் விஜய் அவருக்கு ஏற்படும் தடைகளைத் தாண்டினால்தான் உண்மையான தலைவனுக்கு அழகு.

19597 Thedalweb Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்
எம்.ஜி.ஆர், கலைஞர்

அதனால் விஜய் செல்லும் பாதை சரியானதுதான்” என்றவரிடம் `விஜய் கட்சியில் இணைவீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இவற்றையெல்லாம் நான் பொதுவாக ரசிக்கிறேன். நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் கிடையாது. விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன். என்னுடைய அரசியல் நிலைப்பாடு என்பது வேறு.

முதல்வர் ஸ்டாலினை அடுத்த தலைவர் என்று கூறினேன்

ஏற்கெனவே இருப்பது போல அல்லாமல் வேறொரு மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் அரசியலில் நல்ல விஷயம். அதை இப்போது என்னால் செய்ய முடியுமா என்றால் சந்தேகம்தான். இப்போது என் முழு கவனமும் சினிமாதான். நடிகர் விஜய்க்காக கூடும் கூட்டம், அவரது கட்சிக்கு வாக்களிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆளும் கட்சியை விமர்சித்தால்தான் அரசியலில் அடுத்த இத்திற்கு வர முடியும். எம்.ஜி.ஆரும், கலைஞரும் அதைத்தான் செய்தார்கள்.

untitled design 16 2024 03 8a769e61951f498bb00ed03bdf64d900 Thedalweb Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்
பார்த்திபன்

அதைவிடுத்து பம்மிக் கொண்டிருந்தால் ஒருவர் தலைவராக முடியாது. விஜய்யை நான் ஆதரிக்கவில்லை. கோயம்புத்தூரில் ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அவருக்கு மஞ்சள் துண்டு போர்த்தி அடுத்த தலைவர் என்று கூறினேன். அரசியலுக்கு யார் வந்தாலும் பாராட்டுவேன். அதற்காக விஜய்யிடம் இரண்டு பெட்டி வாங்கிவிட்டதாக அர்த்தம் கிடையாது. விஜய் இதுவரை இரண்டு மேடைகள்தான் ஏறி இருக்கிறார்.

அரசியல் என்றாலே பேச்சுதான்!

ஒரு மேடையில் அவர் பரபரப்பாக பேசியது ஆச்சர்யமாக இருக்கிறது. கொஞ்சம் கூட தவறில்லாமல் அவர் பேசியது மிகப்பெரிய ஆச்சரியம். பேசிப் பேசி முன்னுக்கு வந்ததுதான் தமிழ்நாடு. அரசியல் என்றாலே பேச்சுதான். அதனடிப்படையில் விஜய் நன்றாகப் பேசுகிறார். இதுவரை நிறைய பேர் வந்திருக்கிறார்கள். இப்போது இவர் வந்திருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பழைய படத்தின் பெயர்களை தற்போது வைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

WhatsApp Image 2025 01 29 at 5 49 44 PM Thedalweb Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்
புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் பார்த்திபன்

கதையை மட்டுமல்ல, தலைப்பையும் புதிதாக சிந்திப்பவன் நான். அதனால்தான் என் படத்திற்கு `54 ஆம் பக்கத்தில் ஒரு மயிலிறகு’ என பெயர் வைத்துள்ளேன். மயிலிறகு ஒரு பெண். 54 என்பது என்னுடைய வயது . புதிதாகத் தலைப்பை யோசிக்காமல் பழைய பெயர் வைப்பது தவறு. அதற்கு தற்போது எதிர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. `பராசக்தி’ என்றால் கலைஞர். அதற்கு மேல் கருத்து கூற முடியாது” என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *