Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்..."- AVM வாழ்த்து

Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்…"- AVM வாழ்த்து


சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படம் ஓ.டி.டி-யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இவர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா மூவரையும் வைத்து தனது அடுத்தப் படத்தை இயக்குகிறார்.

சிவகார்த்திகேயனின் ’25’ படமும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100வது திரைப்படமுமான இப்படத்திற்கு ‘பராசக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகியிருக்கும் ‘SK 25’ டைட்டில் டீசரில் இதன் டைட்டில் அதிகாரபூர்வமாக வெளியானது. இதில் சிக்கல் என்னவென்றால், விஜய் ஆண்டனி நடிக்கும் ‘சத்தித் திருமகன்’ படத்தின் தெலுங்கு டைட்டில் ‘பராசக்தி’ என்று முன்பே பதிவு செய்யப்பட்டுவிட்டது. இதனால், இந்த டைட்டிலை தெலுங்கில் சுதாகொங்கரா பயன்படுத்த முடியாத சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

1200 675 23429584 557 23429584 1738157278187 Thedalweb Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்..."- AVM வாழ்த்து
பராசக்தி

73 ஆண்டுகளுக்கு முன்பே கலைஞர் கருணாநிதி வசனத்தில், சிவாஜி நடிப்பில் சமூகநீதியை உரக்கப்பேசி மக்கள் மனதில் என்றென்றும் நின்ற சரித்திரத் திரைப்படம் ‘பராசக்தி’. இப்படத்தை ‘ஏவிஎம்’ தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் இது குறித்து கூறியிருக்கும் ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம், “73 ஆண்டுகளைத் தாண்டியும் என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சரித்திரத் திரைப்படம் ‘பராசக்தி’. தமிழ் சினிமாவில் சமூகநீதியை உரக்கப்பேசித் திரைப்படம்.

WhatsApp Image 2025 01 29 at 18.40.50 Thedalweb Parasakthi: "சமூகநீதியை பேசிய சரித்திர படம் 'பராசக்தி'; அதை சிவகார்த்திகேயன்..."- AVM வாழ்த்து
ஏவிஎம் தயாரிப்பு நிறுவனம்

அந்த சரித்திரத்தை டாவன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பராசக்தி’ திரைப்படமும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். வருங்கால சந்ததியை ஊக்கப்படுத்தும் திரைப்படமாக இருக்க வேண்டும். ஏவிஎம் குடும்பம் இயக்குநர் சுதாகொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயனின் வெற்றி மணிமகுடத்தில் மற்றொரு வெற்றி இறகைச் சூட்டி அழகுபடுத்த வாழ்த்துகிறது” என்று கூறியிருக்கிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *