Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்? |basil joseph debuts in tamil cinema by parasakthi movie

Parasakthi: இலங்கையில் SK ; பராசக்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறாரா பேசில் ஜோசப்? |basil joseph debuts in tamil cinema by parasakthi movie


சுதா கொங்கராவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25-வது திரைப்படமாக `பராசக்தி” உருவாகி வருகிறது . இப்படத்தை `டான் பிக்சர்ஸ்’ ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். சிவகார்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மதுரை,காரைக்குடி பகுதிகளில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் உட்பட இலங்கையில் படப்பிடிப்பில் பங்கேற்று வரும் நடிகர்கள் பலரின் புகைப்படங்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

Basil Joseph - பேசில் ஜோசப்

Basil Joseph – பேசில் ஜோசப்

படப்பிடிப்புத் தளத்திலிருந்து கசிந்த புகைப்படங்கள் மூலமாக இப்படத்தில் தற்போது மலையாள நடிகர் பேசில் ஜோசப் நடித்து வருவது தெரிய வந்திருக்கிறது. இலங்கையில் நடக்கும் படப்பிடிப்பில் இவருடைய காட்சிகளும் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதுதான் இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம். பேசில் ஜோசப் நடிப்பில் சமீபத்தில் `பிராவின்கூடு ஷாப்பு’, `பொன்மேன்’ ஆகிய மலையாள திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் `பொன்மேன்’ திரைப்படம் தற்போது ஓ.டி.டி தளத்தில் வெளியாகி பல பக்கங்களிலிருந்தும் பாராட்டுகளை அள்ளி வருகிறது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *