முதலில் பேசிய நடிகை அனிகா, ” நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்துல என்னோட ரோல் ரொம்ப யதார்த்தமாகவுன் அழகாகவும் இருக்கும். ரொம்பவே ஜாலியான படம்.” என்றார்.
அடுத்ததாக பேச வந்த படத்தின் கதாநாயகனான பவிஷிடம் `ஹீரோவாக பண்ற முதல் படத்திலேயே இரண்டு ஹீரோயின், நிறைய இடங்களில் படம் ரொம்ப உங்களோட நிஜ வாழ்க்கையோட கனெக்ட் ஆனதுன்னு சொல்லியிருக்கீங்களே’ என தொகுப்பாளர் கேட்டதற்கு, “இந்த கேரக்டர் நான் மட்டுமில்ல எனக்கு தெரிஞ்சு எல்லாருமே கனெக்ட் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். ஏன்னா காதல் தோல்வி எல்லாருக்குமே நடந்திருக்கும். அதுனால கண்டிப்பா எல்லாருமே கனெக்ட் பண்ணிக்கமுடியுற ஒரு படமாகதான் தான் இருக்கும்” என்றார்.
இவரை தொடர்ந்து மேடையில் பேசிய நடிகர் வெங்கடேஷ், “தனுஷ் சார், ஆக்க்ஷன்- கட், இந்த ரெண்டு விஷயங்களுக்கு நடுவுலதான் கொஞ்சம் சீரியஸாக இருப்பாரு. ஒரு காட்சிக்கு கட் சொல்லி முடிச்சதுக்கு அப்புறம் ஜாலியா கலாய்ச்சிட்டு பேசிட்டிருப்பாரு. என்கிட்ட ‘டைம் இஸ் மணி’ னு சொல்லிட்டே இருப்பாரு. அவர் வேகமா வேலை செய்யக்கூடிய இயக்குநர். அவர்கிட்ட இருந்து வேகமான மேக்கிங் பிராசஸ் கத்துக்கலாம்” என்றார்.