இந்த படத்தில் காதல் மற்றும் நட்பின் சித்தரிப்பு மிகவும் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது. தனுஷ் சார் சொன்ன மாதிரி ‘ஜாலியா வாங்க ஜாலியா போங்க’… திருச்சிற்றம்பலம் வைப்ஸ் கிடைக்கும்” என்று பாராட்டியிருந்தார்.
இதையடுத்துத் தற்போது இப்படம் குறித்து தனுஷ், ” ‘ராயன்’ படத்துக்கு அப்புறம் நான் இயக்கிய இருக்கிற படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ நாளை ரிலீஸ் ஆகுது. நாங்க இந்தப் படத்த எடுக்கும்போது எந்த அளவுக்கு ஜாலியாக, சந்தோஷமாக எடுத்தோமோ, நீங்க பார்க்கும்போது அதே சந்தோஷம் இருக்கும்னு நம்புறேன்.
இந்தப் படத்துல நடிச்சிருக்கிற இளைஞர்கள் எல்லாரும், அவங்களோட எதிர்காலத்த எதிர்பார்த்துக் காத்துக்கிட்டு இருக்காங்க. கண்ணுல கனவோட இருக்காங்க, அந்தக் கனவுகள் எல்லாம் நிறைவேறனும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன். அந்த இடத்துல நானும் இருந்திருக்கேன், அந்த உணர்வு எனக்கு நல்லாவே தெரியும். படத்துல நடிச்சிருக்கிற எல்லாருக்கும் வாழ்த்துகள். நாளை படம் ரிலீஸ், எல்லாரும் என்ஜய் பண்ணி பாருங்க” என்று பேசி காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.