Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ

Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா – விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ


நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோ ஒன்றைத் தொடங்கி இருக்கின்றனர்.

நயன்தாரா நடிப்பில் தற்போது ‘டெஸ்ட்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் சித்தார்த், மாதவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

67d159afe6013 Thedalweb Nayanthara: 7000 சதுர அடி; நயன்தாரா - விக்னேஷ் சிவன் தொடங்கிய பிரமாண்ட ஸ்டூடியோ
நயன்தாரா

கடந்த 20 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் நயன்தாரா, சினிமாவைத் தாண்டி பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள், நாப்கின் தயாரித்தல் உள்ளிட்ட சில தொழில்களை தொடங்கி நடத்தி வருகிறார். அது மட்டுமின்றி ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் படங்களைத் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது சென்னை தேனாம்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள தங்களது பங்களாவை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஹோம் ஸ்டூடியோவாக மாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பான புகைப்படத்தையும், வீடியோவையும் சமூக வலைதளங்களில் இருவரும் பகிர்ந்திருக்கின்றனர்.

7000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஸ்டூடியோவை நிகிதா ரெட்டி என்பவர் சிறப்பான உள் கட்டமைப்புடன் கைவினைப் பொருட்களால் பிரமாண்டமாக வடிவமைத்திருக்கிறார். இந்த ஸ்டூடியோ தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX





Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *