Nagma : "கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா..." - நடிகை நக்மாவின் பர்சனல் |90'S Evergreen Heroine Series Part -1 Nagma

Nagma : “கல்யாணம், குழந்தைன்னு வாழ எனக்கும் ஆசைதான்; ஆனா…” – நடிகை நக்மாவின் பர்சனல் |90’S Evergreen Heroine Series Part -1 Nagma


பெற்றோர் விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சிட்டாலும்கூட, தன் அப்பா இறக்கும் வரைக்குமே, அவர்கூட நக்மா ரொம்பவே சிநேகத்துடன் இருந்தாங்க. அதேபோல, அம்மாமேலயும் நக்மாவுக்கு எப்பவுமே அன்லிமிட்டட் லவ்தான். ஷூட்டிங் உட்பட நக்மா எங்க போனாலும், அவங்க அம்மாவும் நக்மாவுக்கு நிழலாவும் அரணாவும் உடனிருப்பாங்க. “சினிமா கரியர்ல நான் உச்சம் தொட்டத்துக்கு, எங்கம்மாதான் காரணம்”னு பல இன்டர்வியூஸ்ல நக்மா சொல்லிருக்காங்க. சரி, அவங்க சினிமால அறிமுகமான கதைக்குள்ளாற போகலாம்.

நக்மா, முதல்முதல்ல அறிமுகம் ஆனது பாலிவுட்லதான். 1990-ல் சல்மான்கானுக்கு ஜோடியா இவங்க நடிச்சு வெளிவந்த ‘Baaghi – The Rebel for Love’ அப்படிங்கற படம்தான் நக்மாவோட  திரை வாழ்க்கையின் விசிடிங் கார்டு. நக்மா நடிச்ச அந்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட். 1990-ம் வருஷம் அதிக வசூலைக் குவிச்ச இந்திப் படங்களோட  பட்டியல்ல இந்தப் படமும் ஒண்ணு. இதுல ஆச்சர்யமான விஷயம் என்னன்னா, முதல் படத்துல நடிச்சப்போ நக்மாவுக்கு 15 வயசுதான். அத்தனை சின்ன வயசுலயும் அந்தப் படத்தை ரொம்ப மெச்சூர்டா ஹேண்டில் பண்ணிருப்பாங்க.

மறைந்த  பாலிவுட் நடிகை திவ்யபாரதியும் நடிகை நக்மாவும் நல்ல ஃபிரெண்ட்ஸ். “நீ ஏன் தமிழ், தெலுங்குப் படங்கள்ல நடிக்கக் கூடாது?” அப்படின்னு அவங்க நக்மாவைப் பார்த்துக் கேட்க, அதன்பிறகே அவங்க கவனம் தென்னிந்திய சினிமா பக்கம் திரும்பிருக்கு.

“எனக்குப் பயணம் செய்றதுன்னா ரொம்ப பிடிக்கும். குறிப்பா, இந்தியா முழுக்க இருக்கிற மக்களோட கலாசாரம், பழக்க வழக்கங்களை நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. நான் தென்னிந்திய மொழிப் படங்கள்ல நடிக்க இதுவும் ஒரு காரணம்” அப்படின்னு இன்டர்வியூ ஒண்ணுல சொல்லியிருக்காங்க நக்மா.

1991-ம் வருஷம், தெலுங்கு படம் ஒண்ணுல அறிமுகமான நக்மா, ஹிந்தி, தெலுங்குன்னு மாறி மாறி பிஸியா நடிக்க ஆரம்பிச்சாங்க. அதுக்குப் பிறகுதான் 1994-ம் வருஷம் ‘காதலன்’ திரைப்படம் மூலமா தமிழுக்கு வந்தாங்க. ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவான்னு ஜாம்பவான்கள் பலர் இணைஞ்சிருந்த அந்தப் படத்துல, நக்மாவால வெறும் கிளாமர் டாலா மட்டும்தான் வந்துபோக முடியும்னு எல்லோரும் சொல்ல, அந்த எண்ணத்தைத் தவிடு பொடியாக்கி, டான்ஸ், காதல், நடிப்புன்னு ஆல் ஏரியாவுலயும் பட்டையைக் கிளப்பினாங்க நக்மா.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *