Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' - சமுத்திரக்கனி

Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' – சமுத்திரக்கனி


‘பாட்டல் ராதா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின், வன்மையான வார்த்தைகளைப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

இளையராஜாவின் இசையை வர்ணித்துப் பேசுகையில் இளையராஜாவை ‘அவன், இவன்’ என மிஷ்கின் பேசியதையும் பலரும் கண்டித்திருந்தனர். மேடை நாகரிகத்துடன் மிஷ்கின் பேச வேண்டும் என்று பலரும் எடுத்துரைர்த்தனர். பிறகு, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான ‘Bad Girl’ படத்தின் பத்திரிகையாளர் சந்த்திப்பில் கலந்து கொண்ட மிஷ்கின், தான் பேசியதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டிருந்தார்.

Screenshot 2025 01 19 at 8.34.04 AM Thedalweb Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' - சமுத்திரக்கனி
மிஷ்கின்

இதையடுத்து மிஷ்கின் பேசிய வார்த்தைகள் வன்மையாக இருந்தாலும், தவறான உள்நோக்கத்துடன் பேசவில்லை என்றும் மிஷ்கின் மன்னிப்புக் கேட்டிருக்கத் தேவையில்லை என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ‘திரு.மாணிக்கம்’ படத்தின் வெற்றி விழாவில் மிஷ்கின் குறித்துப் பேசியிருக்கும் சமுத்திரக்கனி, “மிஷ்கின் தான் பேசியது தவறு என்று எல்லார் கால்லையும் விழுந்து மன்னிப்புக் கேட்டுட்டார்ல.

மிஷ்கின் என்னையப் பார்த்தாலே கெட்டவார்த்தை சொல்லித்தான் கூப்பிட்டு, அன்பாக நலன் விசாரிப்பார். அது அவருடைய இயல்பான குணம். நம்ம கிராமத்துல இன்னும் அப்படித்தான் அன்பை வெளிபடுத்துவாங்க. நாங்க இயல்பாக அப்படித்தான் பேசுவோம். அதே மாதிரி மேடையிலையும் மிஷ்கின் பேசிட்டார் அவ்வளவுதான். கெட்டவார்த்த பேசுறவன் எல்லாம் கெட்டவன் இல்லை.

Screenshot 2025 01 29 at 6 47 03 PM Thedalweb Mysskin : `மிஷ்கின் பேசியதில் தவறில்லை; கெட்டவார்த்தை பேசுறவன் கெட்டவனா?' - சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி

மிஷ்கின் அன்பின் மிகுதியில பேசிட்டார். மிஷ்கின் அதிகமான அன்பு கொண்டவன். அவனை புரிஞ்சிக்கனும். அத நான் தப்பாவே பார்க்கல. வேணுமனா மிஷ்கினுக்காக நானும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *