Mysskin: ``பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால்தான்" - மிஷ்கின் குறித்து அருள்தாஸ்

Mysskin: “பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால்தான்" – மிஷ்கின் குறித்து அருள்தாஸ்


‘பாட்டல் ராதா’ புரொமோஷன் விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா. ரஞ்சித் முதலிய இயக்குநர்கள் கூடிய விழாவில் இயக்குநர் மிஷ்கின் பேசியது மிகுந்த கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

பேச்சில் அடிக்கடி கெட்ட வார்த்தைகள் பிரயோகித்ததும் இளையராஜா முதலான சிறந்த இசையமைப்பாளர்களை ஒருமையில் பேசியதும், கூடியிருந்தவர்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பையும் பலரை கோபத்திலும் கொண்டுப்போய் நிறுத்தியிருக்கிறது. இதைப் பற்றி நடிகர், ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மிகவும் கோபத்துடன் தன் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். அதைப் பற்றி விரிவாக அருள்தாஸிடம் பேசினோம்.

மிஷ்கின்
மிஷ்கின்

“அன்றைக்கு இயக்குநர் மிஷ்கின் பேசியது அருவருப்பாக இருந்தது. நம்மிடம் ஒரு நாகரீகத்தை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தெரியாத கெட்ட வார்த்தையா இருக்கிறது. நாம் சமூகத்தில் முன்னேறி ஒரு இடத்திற்கு வருகிறோம். ஒரு நடிகராகவோ கேமராமேன் ஆகவோ ஒரு இயக்குநர் ஆகவோ ஆகிவிடுகிறோம். அதற்கான மெச்சூரிட்டியை நாம் கைக்கொள்ள வேண்டும்.

பொது மேடையில் நமது முன்னத்தி ஏர்களை அவ்வளவு எளிதாகக் கையாள்வது அதுவும் இளையராஜா, பாலா முதலியவர்களை அவர் பேசியது எனக்குக் கோபத்தைத் தூண்டிவிட்டது. இதைக் கேட்கும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் எவ்வளவு வேதனைப்படும். சமூகத்தில் அவர்களுக்கு இருக்கிற பெரிய மதிப்பிற்கு பங்கம் வராதா? முதல் முறை அவர் வாய் தவறிப் பேசியதும் அல்ல. தொடர்ச்சியாக அவர் பல மேடையில் இது மாதிரிதான் பேசி வருகிறார். முழுமை இல்லாமல் மற்றவர்களைப் பற்றி தவறாக உளறுகிறார்.

8462567 myskin Thedalweb Mysskin: ``பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால்தான்" - மிஷ்கின் குறித்து அருள்தாஸ்
மிஷ்கின், அருள் தாஸ்

கெட்ட வார்த்தைகளின் உச்சத்திற்குப் போய் பேசுகிறார். அங்கே பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். அந்த அறிமுக இயக்குநரின் குடும்பங்கள் பார்க்க வந்திருக்கலாம். நிகழ்ச்சிகள் நமக்கு மட்டும் அல்ல. உலகம் முழுமைக்கும் தமிழ்ச் சமூகம் இருக்கிற இடத்திற்கு இந்த நிகழ்வுகள் போய்ச் சேருகின்றன. உலகம் முழுவதும் பார்வையிடுகிறார்கள். இப்படி மீடியா வளர்ந்திருக்கிற காலத்தில் பாசிஸிட்டிவ்வாக பேசவேண்டிய கடமை மூத்த இயக்குநர் மிஷ்கினுக்கு இருக்க வேண்டுமா, இல்லையா?

இதே மாதிரி மிஷ்கின் நடிகர் விஷால் உடன் படம் செய்தார். உங்களுக்கும் அவருக்கும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்து விட்டீர்கள். ஆனால் மேடையிலேயே விஷாலை மிகவும் தரம் தாழ்ந்து பேசினார். பிரிவது இயற்கை. இப்படி எல்லாம் பொதுவெளியில் திட்டலாமா? அவர் திட்டிய வார்த்தைகளை நான் சொல்லிக் காட்டவும் முடியாது.

நீங்கள் எழுதிக் காட்டவும் முடியாது. இத்தனை தரம் இறங்கி மிஷ்கின் போகலாமா? படத்தைப் பற்றி நல்லபடியாக பேசிவிட்டுதான் அன்று ‘பாட்டல் ராதா’ மேடையிலிருந்து மிஷ்கின் இறங்கியிருக்க வேண்டும். வாடா போடா, வாடி போடி என்பதும் எனக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. நம் தமிழ் சினிமா இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக இருக்கிறது. நம் டெக்னீசியன்கள் எவ்வளவு பேர் இந்தியா முழுக்க போயிருக்கிறார்கள். இன்றைக்கு வருகிற புது இயக்குநர்கள் படங்களை பாசிட்டிவ்வாக எடுக்கிறார்கள். பழைய படங்கள் மாதிரி குத்துப் பாடல்கள், கிளப் பாடல்கள், கவர்ச்சியெல்லாம் இவர்கள் ஒழித்து விட்டார்கள். கதை சொல்கிறார்கள்.’மகாராஜா’, ‘லப்பர் பந்து’ பாருங்க கதை சொல்கிறார்கள். வெளிநாட்டு படங்களை பார்த்து காப்பி செய்து படம் செய்கிறவர்தான் நீங்கள். நீங்கள் சேது, மகாராஜா, லப்பர் பந்து மாதிரியோ இந்த மண்ணுக்கான படங்களை எடுக்கவேயில்லை.

Screenshot 2025 01 12 204927 Thedalweb Mysskin: ``பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால்தான்" - மிஷ்கின் குறித்து அருள்தாஸ்
அருள் தாஸ்

வெற்றிமாறன் மாதிரி படங்கள் எடுக்கிற ஆளும் நீங்கள் இல்லை. அயல் சினிமா பார்த்துவிட்டு, புத்தகங்கள் படித்துவிட்டு படித்தவர் பேசும் பேச்சா பேசுகிறீர்கள். சபை நாகரீகம் வேண்டாமா? இவ்வளவு பெரிய டைரக்டர்களை வைத்துக்கொண்டு பேசினால் அவர்களுக்கு தர்ம சங்கடம் ஏற்படாதா? இதை யார் கேட்பது? ஆணவமாக பேசுவதை, முறை தவறி பேசுவதை யார் கண்டிப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவது அதனால் தான் அவரை கோபத்தோடு பேசி, என் கண்டனத்தை பதிவு செய்கிறேன். மற்றபடி அவர் மீது எனக்கு தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கிடையாது. ஒரு திரைக் கலைஞனாக மட்டுமே அவர் மீது விருப்பு வெறுப்பு இல்லாமல் அவர் பேசியதை கண்டிக்கிறேன். அவர் தன்னை இப்படியான இயல்பை மாற்றிக் கொண்டால் மகிழ்வேன்” என்றார் அருள்தாஸ்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *