விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்- அம்மினி கொழுக்கட்டை | Mini dumpling recipe

85 / 100

Mini dumpling recipe

Mini dumpling recipe
Mini dumpling recipe

அனைவரும் விநாயகர் சதுர்த்திக்கு (Mini dumpling recipe)கொழுக்கட்டை செய்வது வழக்கம். ஏனெனில் விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. நீங்கள் வழக்கம் போல் செய்யப்படும் கொழுக்கட்டையை செய்ய விரும்பாமல், வித்தியாசமான கொழுக்கட்டை செய்ய விரும்பினால், அம்மினி கொழுக்கட்டை செய்யுங்கள்.

உங்களுக்கு அம்மினி கொழுக்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அம்மினி கொழுக்கட்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

மாவிற்கு…

இடியாப்ப மாவு – 1/2 கப்

நல்லெண்ணெய் – 1/2 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* கடுகு – 1/2 டீஸ்பூன்

* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்

* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை

* கறிவேப்பிலை – சிறிது

* வரமிளகாய் – 2

* துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

* ஒரு பௌலில்(Mini dumpling recipe) இடியாப்ப மாவு, உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* பின் நீரை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்பு அந்த சூடான நீரை இடியாப்ப மாவில் ஊற்றி, கரண்டி பயன்படுத்தி நன்கு கிளறி விட வேண்டும்.

* பின் அதை தட்டால் ஒரு 5 நிமிடம் மூடி வைத்து குளிர வைக்க வேண்டும். பின் கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மூடியைத் திறந்து, கையால் மாவை நன்கு மென்மையாக பிசைய வேண்டும்.

* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி இட்லி தட்டில் வைக்க வேண்டும்.

* பின் இட்லி பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, நீர் கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து பத்து நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

* அதே வேளையில் மற்றொரு அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும் * பின் இட்லி தட்டில் வேக வைத்துள்ள கொழுக்கட்டைகளை கடாயில் போட்டு ஒருமுறை கிளறி, மேலே துருவிய தேங்காயை சேர்த்து, வேண்டுமானால் சிறிது உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், அம்மினி கொழுக்கட்டை தயார்.

#Mini dumpling recipe