ஆனால் ராஜா 1902-ம் ஆண்டு காலமானார். இதையடுத்து அப்பங்களா 1915-ம் ஆண்டு பெரின் மானெக்ஜி பட்லிவாலா என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. அவர் அந்த பங்களாவை வில்லா வியன்னா என்று பெயர் மாற்றம் செய்தார். பின்னர் அதனை குர்ஷிபாய் என்பவரிடம் விற்பனை செய்தார். குர்ஷிபாய் இறந்தபோது அவரது சகோதரி குல்பானு என்பவருக்கும், அதனை தொடர்ந்து குல்பானுவின் மகனுக்கும் சென்றது. கடைசியாக இந்த பங்களாவை நடிகர் சல்மான் கான் வாங்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் அவரது தந்தை சலீம் கான் நமக்கு இவ்வளவு பெரிய பங்களா எதற்கு என்று கூறிவிட்டார். இதனால் சல்மான் கான் அதனை வாங்கும் திட்டத்தை கைவிட்டார்.
ஷாருக்கான் வாங்கியது எப்படி?
1997ம் ஆண்டு ஷாருக்கான் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டபோது பாடல் காட்சி மன்னத் பங்களாவில் படமாக்கப்பட்டது. உடனே அந்த பங்களா ஷாருக்கானுக்கு மிகவும் பிடித்துப்போனது. அப்போது இந்த வீட்டை ஒரு நாள் விலைக்கு வாங்குவேன் என்று ஷாருக்கான் சபதம் செய்து கொண்டார். 2001-ம் ஆண்டு ஷாருக்கான் சொன்னபடி மன்னத் பங்களாவை 13 கோடிக்கு விலைக்கு வாங்கினார். அதனை வாங்குவதற்கு ஷாருக்கானிடம் போதிய பணம் இல்லாமல் இருந்தது. உடனே தயாரிப்பாளர் ஒருவரிடம் அடுத்த படங்களில் நடித்துக்கொடுக்கிறேன் என்று சொல்லி பணத்தை முன்கூட்டியே வாங்கி மன்னத் பங்களாவை வாங்கினார்.
ஷாருக்கான் அப்பங்களாவை விலைக்கு வாங்கிய போது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. அதனை பெரிய அளவில் பழுதுபார்க்கவேண்டியிருந்தது. ஷாருக்கான் தனது மனைவி கெளரியின் துணையோடு பங்களாவை புதுப்பித்தார். ரூ.13 கோடிக்கு வாங்கிய பங்களா இப்போது 200 கோடி மதிப்புடையதாக இருக்கிறது. இப்போது 6 மாடிகளுடன், நீச்சல் குளம், ஜிம், கார்டன் போன்ற வசதிகளுடன் இப்பங்களா இருக்கிறது. இதில் இப்போது மேலும் சில மாடிகள் கட்டப்பட இருக்கிறது. இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் இப்பங்களா புதுப்பொலிவு பெற இருக்கிறது. அதற்காக தற்போது வேறு ஒரு குடியிருப்புக்கு மாறி இருக்கிறார் ஷாருக்!