சம்பாரிச்ச பணம் போதும். இனிமேல் நல்ல படங்கள் மட்டும்தான்
பெயின்டராக இருந்து நடிகராக மாறி இதுவரைக்கு என் தகுதிக்கு மீறி நல்லா சம்பார்ச்சிட்டேன். இனி எனக்குப் பிடிச்ச மாதிரி, நல்ல நல்ல கதையுடன் படங்கள் பண்ணினா போதும்.
கலைத்தாய் எனக்கு வாய்ப்புகள் கொடுத்த நல்லா வச்சிருந்தாலே போதும். எல்ரெட் குமார் அண்ணோட திரும்ப திரும்ப வேலை பார்க்கிறது ரொம்ப சந்தோஷம்.
எல்லா படத்திலும் துணையாக நிற்கிறார் வெற்றிமாறன் அண்ணன்
‘விடுதலை’ வெற்றிமாறன் அண்ணனால சிறப்பாக அமைஞ்சது. அதுக்கு அப்றம் ‘கருடன்’ படமும் அவர் மூலமாக, அவரோட நிறைய பங்களிப்பில் சிறப்பாக அமைஞ்சது.
இப்போது இந்தப் படமும் அவர் மூலமாக, அவரோட பங்களிப்பில் நடப்பது மிகுந்த மகிழ்ச்சி. எனக்கு எப்பவும் துணையாக இருக்கார் வெற்றி அண்ணன்.

‘மாமன்’ படத்தோட கதைக்கூட வெற்றிமாறன் அண்ணன்கிட்ட சொன்னேன். அவர் சில விஷயங்களை மாற்ற வேண்டும் எனப் பல அறிவுரைகளைக் கொடுத்து, “இந்தப் படம் நல்லா வரும். நல்ல குடும்பக் கதை, எல்லோருக்கும் பிடிக்கும்” என்று சொன்ன பிறகுதான் நடிச்சேன்.
இந்தப் படத்திலயும் அவரது நிறைய அறிவுரைகளைக் கேட்பேன். இந்தப் படமும் சிறப்பாக எனக்கு அமையும்.