2013-ம் ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு இத்திரைப்படத்தை வெளியிட இத்திரைப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி திட்டமிட்டார். ஆனால், சில தாமதங்களால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைப்படம் வெளியாகிறது. சுந்தர்.சி-யுடன் திரைக்கதை மற்றும் வசன பணிகளில் நீண்ட ஆண்டுகளாக பயணிப்பவர் வெங்கட் ராகவன். அரண்மனை 1,2,3,4, ஆம்பள, கலகலப்பு என சுந்தர்.சி-யின் பல படங்களுக்கும் வசனம் எழுதிய இவருக்கு வசனகர்த்தாவாக முதல் திரைப்படம் `மதகஜராஜா’தான். ஆதலால், இந்தப் படம் இவருக்கும் கூடுதல் ஸ்பெஷல்.