இதனிடையே இன்று (ஜனவரி 12) காலை ரசிகர்களுடன் திரையரங்கில் படத்தைப் பார்த்த விஷால் பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். பல வருடங்களுக்குப் பிறகு ‘மதகஜராஜா’ படம் திரையரங்கில் வெளியாகி இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. பொதுவாக என்னுடைய படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கிற்கு வந்தால் ஒரு 10, 15 நிமிடங்கள் மட்டும் பார்த்துவிட்டு சென்றுவிடுவேன்.
ஆனால் ‘மதகஜராஜா’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாகப் பார்த்தேன். அவர்களின் கைத்தட்டல், விசில், சிரிப்பு எல்லாவற்றையும் பார்க்கும்போது ஒரு நடிகனாக மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. எனக்கும் சுந்தர் சாருக்கும் இது ஒரு ஸ்பெஷல் ஆன படம். ‘சண்டக்கோழி’க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் இது.