இந்த நிகழ்வில் பேசிய நடிகர் விஷால், “எனக்கு ஆக்டர் விருதைத் தாண்டி பெஸ்ட் சிங்கர் அவார்ட் இந்தப் படத்துக்கு கிடைக்கணும். `மை டியர் லவ்வர்’ பாட்டை பாடுற சிங்கர் இதுக்குமேல பாடவேகூடாதுனு சுந்தர் சியும், விஜய் ஆண்டனியும் பேசுனாங்க. எனக்கு விஜய் ஆண்டணியை ராஜாவாகதான் தெரியும். எங்க வீட்லேயே, `பாட்டு பாடி எதுக்கு விஷப்பரிட்ச்சை எடுக்கிறாங்கன்னு’ கேட்டாங்க.
ஊட்டில 12 வருஷத்துக்கு ஒரு முறை எப்படி குறிஞ்சிப் பூ பூக்குமோ, அதே மாதிரிதான் `மதகஜராஜா’ திரைப்படமும். இந்த படத்துல ஒரு சம்பவம் நடந்தது. அதோட என்னுடைய கரியர் முடிஞ்சதுன்னு நினச்சேன். ஒரு காட்சியில சம்மர்சால்ட் அடிக்கணும். அப்போ எனக்கு அடிபட்டுடிச்சு. உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனாங்க. நான் உடற்பயிற்சி பண்ணி சரியாக இருந்ததுனால ஒன்னும் ஆகலைன்னு மருத்துவர் சொன்னாரு.” என்றார்.