Lubber Pandhu: ``அட்டகத்தியே கெத்துதான்..!” - தினேஷ் எக்ஸ்க்ளூசிவ்

Lubber Pandhu: “அட்டகத்தியே கெத்துதான்..!” – தினேஷ் எக்ஸ்க்ளூசிவ்


பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பியிருக்கிறது `லப்பர் பந்து’ திரைப்படம். கெத்து கதாப்பாத்திரத்தில் கெத்தாக வந்து மிரட்டியிருக்கிறார் தினேஷ். அட்டகத்தி தினேஷாக தொடங்கி இன்று நம் முன் `கெத்தாக’ அமர்ந்திருந்த அவரிடம் கேள்விகளை முன்வைத்தோம்…

“அட்டகத்தி உங்களுடைய அடையாளமா இருந்தாலும், இந்தப் படத்தில் கெத்து தினேஷ்னு தான் இன்ட்ரோ வருது. கெத்து கதாப்பாத்திரமும் கொண்டாடப்படுது. இந்த பெயர் எப்படி வந்தது? கெத்தும் தினேஷும்…”

“முதலில் கெத்துன்ற பெயர் இல்லை. பூமாலை இருந்தது டி-சர்ட் பின்னால் வேறு பெயர் இருந்தது. சில காரணங்களுக்காக அதைப் பயன்படுத்த முடியவில்லை. கடைசி நேரத்தில்தான் கெத்து செட்டாச்சு.

ரஞ்சித் சார் அட்டகத்தி தினேஷின்ற பெயர் ஏன் மாறலன்னு கேட்டிருக்கார். இப்ப கெத்துன்னு பெயர் வந்தது அவருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு நம்புறேன்.

யாரையும் காயப்படுத்தாம இருக்குறதே கெத்துதான். அட்டகத்தியே கெத்துதான்.”

“பல ஊர்கள்ல மக்கள் எல்லாரும் உங்களை கொண்டாடுறாங்க. நீங்களும் தியேட்டர்ல பாத்திருக்கிங்க. எவ்வளவு நிறைவா இருக்கு?”

“சினிமால என்ன கத்துக்கிட்டீங்கன்னு கேட்டா, நான் பொறுமையா இருக்குறதுன்னுதான் சொல்வேன். இது ரொம்பநாள் முன்னாடியே வரணும் சொன்னாங்க, ஆனா லைஃப் எப்ப நமக்கு வரணுமோ அப்ப கொடுத்திருக்கு. இது எனக்கு மட்டும் இல்லாமல் சஞ்சனா, ஸ்வாசிகா எல்லாருக்கும் நடந்திருக்கிறது நிறைவா இருக்கு.”

“படத்த பாத்த எல்லாருக்கும் அவங்கவங்க கிரிக்கெட் நாஸ்டாலஜியா ஃபீல் ஆகியிருக்கு… உங்களுக்கு அப்படி எதும் இருக்கா?”

“நான் பழைய வண்ணாரப்பேட்டையில இருக்கும்போது டென்னிஸ் பால் கிரிக்கெட் தியாகராஜா காலேஜ் பின்னால விளையாடுவோம். நான் தான் அந்த டீம்லயே சின்ன பையன். சண்டே ஆனா விளையாடியே ஆகணும்னு இருக்கும்.

ஸ்கூல் படிக்கும்போது IOC கிரவுண்ட், ராபின்சன் பார்க்ல லப்பர் பால் கிரிக்கெட் விளையாடுவோம். இது என்னோட டீம். இப்ப சமீபத்தில கூட ஆடினோம். ஆனா முன்னாடி மாதிரி இல்ல, திரும்பவும் விளையாடணும்.

என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர் Jonty Rhodes, ஏ.பி.டிவில்லியர்ஸ், ராபின்சன், சச்சின், கங்குலி, அசாருதீன், ஜடேஜா, கபில்தேவ்… ரொம்ப பழசா இருக்குன்னு நினைக்காதீங்க” (சிரிக்கிறார்).”

“இயக்குநர் தமிழரசன் ஒரு நேர்காணல்ல, “தினேஷ் அண்ணா ரஞ்சித் சார் படத்துல நடிச்சுட்டாரு, வெற்றிமாறன் சார் படத்தில நடிச்சிருக்காரு, ராஜு முருகன் சார் படத்துல நடிச்சிருக்காரு இந்த மூணும் வேற வேற தளங்கள்ல இன்டென்ஸான பாத்திரங்கள். இப்படியான ஒரு நபர் இந்த கதைக்கு சரியார் இருப்பார்னு தோணிச்சு” இப்படி சொல்லியிருக்கார். உங்க கேரியர் எவ்வளவு நிறைவா இருக்கு?”

“நான் வேலையா பிளான் பண்ணி பண்றது இல்லை. மனசுக்கு சமாதானமா வேலை பாக்கணும்.

ஒரு டைம்ல பிடிச்சும் பண்ண கூடாது, பிடிக்காமலும் பண்ண கூடாது, சரியா பண்ணனும் நினைச்சேன். அப்படி கமிட்மென்டா சில படங்கள் பண்ணிருக்கேன்.

இப்ப திரும்பவும் மனசுக்கு சமாதானமான படங்களை பண்ணினாதான் வொர்க் ஆகும் தோனுது.

எனக்கு எல்லா நல்ல படங்களும் அமைஞ்சிருக்குது. ஆனா மதம் சார்ந்தோ, சாதி வச்சோ, வன்முறையை வச்சோ படம் வேண்டாம்னு இருக்கு. சில சீன்ஸ் வேண்டாம்னு நினைக்கிறேன். இங்க குழப்பத்த உண்டு பண்ற எதையும் க்ளோரிஃபை பண்ண வேண்டாம்.

சாதியா இருந்தா சாதிய க்ளோரிஃபை பண்ற படங்கள்ல நடிக்க மாட்டேன். அதிலிருக்கிற அடக்குமுறையை பேசுவது வேற.”

முழு நேர்காணலையும் வீடியோவில் காணுங்கள்…



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *