1999 இல் வெளியான “கூங்கட் கே பட் கோல்” என்ற திரைப்படத்தின் கதையை நாங்கள் திருடியதாக பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஆனந்த் மகாதேவன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், உண்மையில், ‘லாபத்தா லேடீஸ்’ எனது படைப்பில் உருவான கதை.
ஆனந்த் சாருடைய படத்திற்கும் எனது கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனது விளக்கங்கள் என் படைப்பு மீது எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு முறையாக பதிலளித்திருக்கும் என நினைக்கிறேன்.

நான் 2014-ல் என் திரைக்கதையை திரைக்கதை எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தது குறித்து வெளியிட்ட அறிக்கை மற்றும் ஆதாரம் போதுமானது என நினைக்கிறேன். என் திரைக்கதையை ‘புர்கா சிட்டி’ இயக்குநர் திருடி விட்டார் என நான் குற்றம்சாட்ட விரும்பினால் குற்றம் சாட்டலாம்.
ஆனால், கலை ஒருமைப்பாடு மற்றும் மனிதாபிமான அடிப்படையில் நான் அத்தகைய குற்றச்சாட்டுகளை தவிர்க்க விரும்புகிறேன்” என நேர்காணலில் தெரிவித்திருக்கிறார் பிப்லாப்.