Kudumbasthan: "யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க..." - 'நக்கலைட்ஸ்' பிரசன்னா பாலசந்திரன் | Prasanna Balachandran Emotional Speech at Kudumbasthan Success Meet

Kudumbasthan: “யூடியூப்பர்களை சாதாரணமாக நினைக்காதீங்க…” – ‘நக்கலைட்ஸ்’ பிரசன்னா பாலசந்திரன் | Prasanna Balachandran Emotional Speech at Kudumbasthan Success Meet


எங்களோட முதல் வீடியோவோட பட்ஜெட் ரூ.250. வாகனத்துக்கான பெட்ரோல் செலவு, டீ செலவுக்குமே அது சரியா போயிடும். ஒரு ஆண்டு அப்படித்தான் போச்சு. யாருக்கும் சம்பளமே கிடையாது. அப்போ எங்ககூட இருந்து உழைச்ச எல்லாருக்குமே இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன்.

பிரசன்னா பாலசந்திரன்

பிரசன்னா பாலசந்திரன்

சினிமாக்குள்ள வர நிறையக் கஷ்டப்பட்டோம். சினிமா பத்தி நிறையக் கட்டுக்கதைகள் சொல்லி வைச்சிருக்காங்க. அதுல முக்கியமானது சினிமா வேற, யூடியூப் வேற அப்டினு சொல்றது. யூடியூப்ல தான் சினிமாக்கான பயிற்சியே எடுத்தோம். அதனால யூடியூப் வேற, சினிமா வேறனு வேறுபடுத்தி பேசாதீங்க. சினிமால இருக்க சுதந்திரம்கூட, யூடியூப்ல இருக்காது. யூடியூப்ல 10 நிமிஷத்துல கதையச் சொல்லி, பார்வையாளர்கள என்கேஜ் பண்ணி வைக்கணும். சினிமாலகூட 200 ரூபா கொடுத்து படம் நல்லா இல்லைனாலும் பல்ல கடிச்சுட்டு உட்கார்ந்து பார்ப்பாங்க. ஆனால், யூடியூப்ல வீடியோ நல்ல இல்லைனா, அடுத்த வீடியோ பார்க்க போயிடுவாங்க.

யூடியூப்பில் சினிமா கனவுடன் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு கடுமையாக உழைப்பவர்கள் நிறையபேர் இருக்காங்க. அந்த யூடியூப்பை, யூடியூப்பர்களைச் சாதாரணமாக நினைக்காதீர்கள்” என்று பேசியிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *