Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி

Kudumbasthan: “பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' – ஜென்சன் பேட்டி


மணிகண்டன் நடிப்பில் வெளியாகியிருக்கிற `குடும்பஸ்தன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

குலுங்கி சிரிக்க வைக்கிறான் இந்த `குடும்பஸ்தன்’ என்பதுதான் பலரின் விமர்சனமாக இருக்கிறது. அந்தக் காமெடிக்கு கதாநாயகன் மணிகண்டனோடு உறுதுணையாக அத்தனை ரகளைகளை திரையில் `நக்கலைட்ஸ்’ குழுவின் ஜென்சனும் , பிரச்ன்னாவும் செய்திருந்தார்கள். ஜென்சனுக்கு `லப்பர் பந்து’ திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய லைம் லைட் கிடைத்திருக்கிறது. சமூக வலைதளப் பக்கமெங்கும் அவரின் வசனங்கள் காட்டுத் தீயாக மீம்ஸ்களில் பரவி வருகிறது. குடும்பஸ்தனுக்கு வாழ்த்துகள் சொல்லி ஒரு குட்டி சாட் போட்டோம். அத்தனை கேள்விகளுக்கும் ஆழமான பதில்களைக் கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.

படத்துக்கு எப்படியான வரவேற்பு கிடைச்சிருக்கு ஜென்சன்?

எல்லோருமே பாசிடிவ்வாகதான் சொல்றாங்க. இப்போ தியேட்டர் விசிட் என்னால போக முடியல. படத்துக்கு கிடைக்கிற விமர்சனங்களை என்னை மகிழ்ச்சியடைய வைக்குது. பொதுவாக நான் தியேட்டர் விசிட் பெரிதளவுல விரும்பாத ஒரு நபர். நம்ம கொடுத்த உழைப்புக்கு மக்களோட அங்கீகாரம் கிடைக்குது. அதன் பிறகு அடுத்தடுத்த வேலைகளுக்கு நகரத் தொடங்கணும்னுதான் நான் நினைப்பேன்.

e6a6e928 f284 44b1 81bb 32cb87725c8a Thedalweb Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி
Jenson

`குடும்பஸ்தன்’ செட் உங்களுக்கு ஒரு வீடு மாதிரிதான்! நக்கஸைட்ஸ் குழு நபர்கள் அனைவரும் இணைந்துப் பண்ணியிருக்கிங்க. செட் எப்படி இருக்கும்?

செட் ரொம்பவே ஜாலியாக இருந்ததுங்க! இந்தப் படத்துக்காக நான் 30 நாள் ஷூட் போனேன். அந்த 30 நாளும் என் வாழ்க்கையில என்னைக்கும் நினைவுல வச்சுக்கிற மாதிரியான நாட்கள்தான். பிரஷரே இல்லாமல் மகிழ்ச்சியாக வேலைகளை கவனிச்சோம். படம் மிடில் கிளாஸோட வாழ்க்கையை பிரதிபலிக்குது. 20 ஆயிரம் ரூபாயில இருந்து 30 ஆயிரம் ரூபாய்குள்ள சம்பளம் வாங்கிற நிறைய மிடில் கிளாஸ் ஆட்கள் இருக்கிறாங்க. அப்படியானவங்கதான் பெரும்பான்மையாக இருக்கிறாங்க. அதுனாலதான் `குடும்பஸ்தன்’ நவீன் கதாபாத்திரத்தோட பலரும் கனெக்ட் பண்ணிக்க முடியுது. சொல்லப்போனால், நானும் அந்த நவீன் மாதிரிதான். கடன் வாங்கிட்டு மனைவிகிட்ட நவீன் கணக்கு பார்க்கிற மொமென்ட்லாம் என்னுடைய வாழ்க்கைதான். நான் இன்னும் அந்த விஷயங்களை சந்திச்சுட்டுதான் இருக்கேன். ஆனால், லைஃப், கரியர் மாறியிருக்கு. பெருமுச்சு விடுகிற இடத்துக்கு வந்திருந்தாலும் அந்த கனெக்ட் நம்மளவிட்டு போகாதில்லையா….

உங்களுக்கு கம்ஃபோர்ட்டான ஆட்கள் சுத்தி இருக்கும்போது காமெடிக்கான வேலைகள் இன்னும் சுலபமாக முடிஞ்சதா?

கிட்டதட்ட அப்படிதான் இருந்தது. ஆனால், எல்லா வேலைகளும் ஈஸியாக முடியல. படம்னா சில சிக்கல்கள் இருக்கத்தானே செய்யும். அப்படியான சிக்கல்கள் இருந்தது. தயாரிப்பாளரும் ரொம்ப உறுதுணையாக இருந்தாங்க. தொடகத்துல இருந்து அவங்களுக்கு இந்தப் படத்தின் மீது நம்பிக்கை இருந்தது.

39fcc7f3 83b5 4d11 8855 0b2f1c5a3f40 Thedalweb Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி
Jenson with sivakarthikeyan

இந்த கதையை இயக்குநர் ராஜேஷ்வர் உங்ககிட்ட எப்போ சொன்னாரு?

நான் `நக்கலைட்ஸ்’ டீம்ல கொஞ்ச நாட்கள் இல்ல. அப்போ `மஞ்ச நோட்டீஸ்’ சேனல்ல வீடியோஸ் பண்ணீட்டு இருந்தேன். நாங்க ரியூனியனாக வர்றதுக்கு இந்த `குடும்பஸ்தன்’தான் காரணம். இரண்டரை வருடத்துக்கு முன்னாடி இந்தப் படத்தோட கதையை என்கிட்ட சொன்னாரு. இயக்குநர் ராஜேஷ்வர் ஒரு ஸ்பேஸ் கொடுப்பாரு. அவர் நடிகர்களை ரொம்ப நம்புவாரு. அதுனால திட்டமிடுகிற விஷயங்களை பொறுப்பாக பண்ணனும்னு நமக்குத் தோணும்.

உங்களை அடுத்தடுத்து குடிகாரன் கதாபாத்திரங்களிலேயே பார்க்கிறோம்! இன்னும் எத்தனை அந்த லிஸ்ட்ல இருக்கு?

(சிரித்துக் கொண்டே….) இதுதான் கடைசி. இதுக்கப்புறம் வராது. இதற்கடுத்து என்னுடைய 5 படங்கள் வரவிருக்கு. ஐந்துமே வெவ்வேறான கதாபாத்திரங்கள்தான். நான் சரியாக அந்த கதாபாத்திரங்கள்ல நடிச்சிருந்தால் அது உங்களை சப்ரைஸ் பண்ணும். எனக்கு இந்த ஸ்டிரியோடைப் வரலனு நினைக்கிறேன். கடந்த வாரம் சிலர் என்கிட்ட `லப்பர் பந்துதான் உங்களுடைய முதல் திரைப்படமா’னு கேட்டாங்க. ஆன்லைன் ஆடியன்ஸுக்குதான் நான் அதிகளவுல பரிச்சயம். இதைத் தாண்டிய மக்களுக்கு நான் பெரியளவுல பரிச்சயம் கிடையாது. நான் இதுவரைக்கும் பண்ணினது இரண்டு படங்கள்தான்னு அவங்க நினைச்சுட்டு இருக்காங்க. என்னை அவங்க அடையாளப்படுத்துற முதல் திரைப்படம்தான் நான் குடிகாரன் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அந்த மக்களுக்கு நான் போய் முதல்ல சேரணும். அதன் பிறகு வெவ்வேறான கதாபாத்திரங்கள் பண்ணலாம்னு யோசிச்சிருந்தேன். ஆனால், எனக்கு தொடக்கத்திலேயே பல வகையான கதாபாத்திரங்கள் வர தொடங்கிடுச்சு. வாழ்க்கையில ஹியூமர் இருக்கு. அதைக் கண்டுப்பிடிக்கக் கத்துக்கணும். லைஃப்லோட மிக அழகான விஷயம் ஹியூமர்தான். அதுல பல வடிவங்கள் இருக்கு. நான் பண்ற ஹியூமர் ஒரு வடிவம்.

WhatsApp Image 2025 01 27 at 8 35 54 PM Thedalweb Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி
Jenson Interview

`என் மாப்ள எப்பவும் முதல் பந்தை சாமிக்கு விட்டுடுவான்’னு நீங்க பேசின வசனம் சமூக வலைதளப் பக்கங்கள்ல பயங்கர வைரல் ஆகிடுச்சே…

ஆமா, எக்கசக்கமாக அந்த மீம்ஸ் வருதே! இப்படி வைரலானது அந்த இயக்குநருக்கு கிடைச்ச வெற்றிதான். அதுல நான் வெறும் கருவி. ஒரு ஸ்பானர் நான் வண்டியை சரி பண்ணிட்டேன்னு சந்தோஷப்படுமா…

WhatsApp Image 2025 01 27 at 8 34 45 PM Thedalweb Kudumbasthan: ``பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு!'' - ஜென்சன் பேட்டி
Jenson Interview

`லப்பர் பந்து’ வெற்றி உங்களுக்கு என்னென்ன விஷயங்களைக் கொடுத்திருக்கு?

என்னுடைய பயணத்தை உறுதிப்படுத்துகிற படமாக `லப்பர் பந்து’ படம் அமைஞ்சது. சினிமாங்கிறது நிலையானது கிடையாதுதானே….`லப்பர் பந்து’ திரைப்படம் அதை நிலையாக மாத்தியிருக்கு. பெருளாதார ரீதியாக அந்தப் படம் ஒரு படி மேல ஏத்திவிட்டிருக்கு. என்னுடைய குடும்பத்துக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. நான் ஒவ்வொரு படத்துக்கு எந்தளவுக்கு சிரத்தைக் கொடுத்து வேலை பார்க்கிறேனோ… அதேதான் `லப்பர் பந்து’ படத்துக்கும் போட்டேன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *