Kishen das: 'முதல்  நீ முடிவும் நீ...' - பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!

Kishen das: 'முதல் நீ முடிவும் நீ…' – பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!


`முதல் நீ முடிவும் நீ’ திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நடிகர் கிஷன் தாஸ்.

இதைத் தாண்டி அவர் `நேர்கொண்ட பார்வை’, `சிங்க்’, `சிங்கப்பூர் சலூன்’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு `தருணம்’ திரைப்படம் வெளியாக இருந்தது. ஆனால், சில சிக்கல்களால் படம் தள்ளிப்போனது.

ஆதலால் படத்தை வெளியீடு செய்யப் படக்குழு திட்டமிட்டது. திட்டமிட்டபடி `தருணம்’ திரைப்படத்தை இன்று (ஜனவரி 31) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. கிஷன் தாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியாகும் முதல் திரைப்படம் `தருணம்’தான். இது இவருடைய சினிமா கரியரில் ஒரு ஸ்பெஷல் மொமன்ட். அதைப் போல இன்று மற்றொரு ஸ்பெஷலான தருணனும் கிஷன் தாஸுக்கு நிகழ்ந்திருக்கிறது.

GinAfGPbEAAv2sj Thedalweb Kishen das: 'முதல் நீ முடிவும் நீ...' - பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!
Kishen Das Marriage

ஆம், கிஷன் தாஸுக்கு இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது. தனது தோழி சுச்சித்ராவைக் கரம் பிடித்திருக்கிறார் கிஷன் தாஸ். இருவருக்கும் கடந்தாண்டு மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. அதனைத் தனது சமூக வலைத்தளப் பக்கத்தின் மூலமாக கிஷன் தாஸ் அறிவித்திருந்தார். இன்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இவர்களின் திருமணத்திற்குத் திரைத்துறையினர் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Happy Married Life, Kishen das!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

WhatsApp Image 2024 11 18 at 16.55.13 Thedalweb Kishen das: 'முதல் நீ முடிவும் நீ...' - பட ரிலீஸ் அன்றே தனது தோழியைக் கரம் பிடித்த கிஷன் தாஸ்!



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *