நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் அவரது நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் என்ற தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தமிழ் சினிமாவின் முன்னாள் ஹீரோயின் மேனகா சுரேஷின் மகள் கீர்த்தி சுரேஷ். ’இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான கீர்த்தி சுரேஷ், ரஜினி முருகன், பைரவா, தொடரி, ரெமோ, சர்க்கார், மாமன்னன் என பல ஹிட் படங்களில் அதுவும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இப்போது தெலுங்கு, இந்தி திரையுலகிலும் கால்பதித்து வலம் வந்துகொண்டிருக்கிறார்.
![Keerthy Suresh: `AntoNY x KEerthy... 15 ஆண்டுகால முடிவிலா காதல்!' - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன்-அப் 3 KeerthySuresh17319949583741731994966364 Thedalweb Keerthy Suresh: `AntoNY x KEerthy... 15 ஆண்டுகால முடிவிலா காதல்!' - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன்-அப்](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-27/b5lt80uh/KeerthySuresh17319949583741731994966364.jpg)
கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்கிற தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது. கீர்த்தி தனது நீண்ட நாள் நண்பர் கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆண்டனி தட்டில் என்பவரை கரம் பிடிக்கவிருக்கார். இவர் தற்போது துபாயில் வசித்து வருகிறாராம். இவர்கள் இருவருக்கும் வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் கோலாகலமாகத் திருமணம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து கீர்த்தி சுரேஷின் பெற்றோர்களிடமே விசாரித்து உறுதிபடுத்தி முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் தற்போது கீர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது காதலர் ஆண்டனியை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். 15 ஆண்டுகளாக தாங்கள் காதலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…
![Keerthy Suresh: `AntoNY x KEerthy... 15 ஆண்டுகால முடிவிலா காதல்!' - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன்-அப் 4 WhatsApp Image 2024 11 18 at 16.55.13 Thedalweb Keerthy Suresh: `AntoNY x KEerthy... 15 ஆண்டுகால முடிவிலா காதல்!' - நடிகை கீர்த்தி சுரேஷ் ஓப்பன்-அப்](https://gumlet.vikatan.com/vikatan/2024-11-18/rtr1do9n/WhatsApp-Image-2024-11-18-at-16.55.13.jpeg)