Keerthy Suresh: டிசம்பரில் கல்யாணம்!; வெளியான திருமணப் பத்திரிக்கை! - எங்கு? எப்போது?

Keerthy Suresh: டிசம்பரில் கல்யாணம்!; வெளியான திருமணப் பத்திரிக்கை! – எங்கு? எப்போது?


நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவகள் ஏற்கெனவே வெளியாகியிருந்தன.

கீர்த்தி சுரேஷுக்கும் அவருடைய நீண்ட நாள் நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது என்று வெளியான தகவலை தொடர்ந்து கீர்த்தி சுரேஷும் திருப்பதியில் அளித்தப் பேட்டியில் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

WhatsApp Image 2024 10 17 at 2.20.56 PM 33 Thedalweb Keerthy Suresh: டிசம்பரில் கல்யாணம்!; வெளியான திருமணப் பத்திரிக்கை! - எங்கு? எப்போது?
கீர்த்தி சுரேஷ்

இதனை தொடர்ந்து, கடந்த நவம்பர் 27-ம் தேதி தன்னுடைய காதலன் ஆண்டனி தட்டிலை அறிமுகப்படுத்தி தனது சமூக வலைதளப் பக்கத்திலும் பதிவிட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது கீர்த்தி சுரேஷ் மற்றும் ஆண்டனி தட்டிலின் திருமண பத்திரிக்கை வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 12-ம் தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது. கீர்த்தி சுரேஷ் அளித்தப் பேட்டியில், `கோவாவில் திருமணம் நடைபெறவிருக்கிறது!’ எனக் கூறியிருந்தார். ஆனால், பத்திரிக்கையில் திருமணம் நடைபெறவிருக்கும் இடம் தொடர்பாக எதையும் குறிப்பிடவில்லை. பத்திரிக்கையில் கீர்த்தி சுரேஷின் தாய் தந்தையார், “ டிசம்பர் 12-ம் தேதி எங்களுடைய மகளுக்கு திருமணம் நடைபெறவிருக்கிறது என்பதை உங்களிடம் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

GeBk Vja0AIuWZ Thedalweb Keerthy Suresh: டிசம்பரில் கல்யாணம்!; வெளியான திருமணப் பத்திரிக்கை! - எங்கு? எப்போது?
Invitation

ஆண்டனி தட்டில் கேராளவைச் சேர்ந்த தொழிலதிபர் எனக் கூறப்படுகிறது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் `ரகு தாத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. மேலும், `ரிவால்வர் ரீட்டா’, `கன்னி வெடி’ போன்ற தமிழ் படங்களை லைன் அப்களை கையில் வைத்திருக்கிறார். இதை தாண்டி கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுக திரைப்படமான `பேபி ஜான்’ இம்மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

WhatsApp Image 2024 11 18 at 16.55.14 Thedalweb Keerthy Suresh: டிசம்பரில் கல்யாணம்!; வெளியான திருமணப் பத்திரிக்கை! - எங்கு? எப்போது?



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *