`டிராகன்” திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கயடு லோகர்தான் தற்போதைய சோசியல் மீடியா சென்ஷேஷன்! தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படத்திலேயே மக்களிடையே ஆழமாக தன்னை பதிவு செய்து பல இளைஞர்களின் க்ரஷ் லிஸ்டிலும் இடம் பிடித்திருக்கிறார் கயடு லோகர். இப்படியான தமிழ் மக்களின் அன்பு அவரை நெகிழச் செய்வதாக சமீபத்திய பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார்.
`டிராகன்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு முன்பு வெளியான டிரைலர், படத்தின் பாடலுக்கு இவர் நடனமாடி சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டக் காணொளி என பல விஷயங்கள் தமிழ் ரசிகர்களுக்கு இவரை ஃபேவரிட்டாக்கியது. பட ரிலீஸுக்குப் பிறகு கோலிவுட்டின் புதிய க்ரஷாக உருவெடுத்திருக்கும் இந்த கயடு லோகர் யார்?