நவம்பர் 14ஆம் தேதி சூர்யாவின் கங்குவா படம் வெளியாக இருக்கிறது.
அதேபோல அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படம் அதற்கு அடுத்த நாள் 15ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் தற்போது ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ படத்தின் வெளியீட்டைப் படக்குழு தள்ளி வைத்திருக்கிறது. இதுதொடர்பாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், “‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’ திரைப்படத்தை வெள்ளிக்கிழமை நவம்பர்15 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.
தற்போது உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையத்தின் காரணமாக இன்னும் ஒருவாரம் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த சூழலில் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்ற அச்சத்தில் இப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழை நின்றதும் விரைவில் படம் வெளியிடப்படும்.
படத்தின் வெளியீட்டுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் நடித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி, இயக்கி இருக்கிறார். அவந்திகா நாயகியாக நடித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் திருமலை இப்படத்தைத் தயாரிக்க எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவதால் இந்த வாரத்தில் தமிழில் ‘கங்குவா’ மட்டும் ரிலீஸாக இருக்கிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU