கரண் ஜோகரின் தயாரிப்பில் நீங்கள் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு, ”அதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் என்னுடன் சேர்ந்து நடித்தால் அவருக்கு நல்ல கதாபாத்திரம் கொடுக்க தயாராக இருக்கிறேன். என்னால் நல்ல படம் தயாரிக்க முடியும். அது மாமியார் மருமகள் சண்டையை கொண்டதாக இருக்காது என்று தெரிவித்தார்.
இதற்கு முன்பு கங்கனா ரனாவத் கடந்த 2017-ம் ஆண்டு காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, எனது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் கரண் ஜோகரை வில்லனாக பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
தற்போது கரண் ஜோகருக்கும், கங்கனா ரனாவத்திற்கும் இடையே உறவு சரியில்லாமல் இருக்கிறது. ஆனால் சல்மான் கான், ஷாருக்கான், ஆமீர்கானுடன் கங்கனா சுமூக உறவை பேணி வருகிறார். சமீபத்தில் தனது படத்தை விளம்பரப்படுத்த சல்மான் கானின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கங்கனா கலந்து கொண்டார். அதோடு ஷாருக்கான் மகன் ஆர்யன் கானையும் சமீபத்தில் புகழ்ந்து தள்ளினார்.