Kadaisi Ulaga Por: "சினிமாவில் தோற்றால் பேராசிரியர் ஆவேன்; திறமையோடு படிப்பு முக்கியம்"-ஹிப்ஹாப் ஆதி | Hiphop Tamizha Aadhi speech at Kadaisi Ulaga Por Pre-Release Event

Kadaisi Ulaga Por: “சினிமாவில் தோற்றால் பேராசிரியர் ஆவேன்; திறமையோடு படிப்பு முக்கியம்”-ஹிப்ஹாப் ஆதி | Hiphop Tamizha Aadhi speech at Kadaisi Ulaga Por Pre-Release Event


சுந்தர். சி சார்தான் என் திறமைக்கு வாய்ப்புக் கொடுத்து இசையமைக்க வைத்தவர். என் படத்தையும் தயாரித்தவர். இப்போது இந்த ‘கடைசி உலகப் போர்’ படத்தை நானே தயாரித்திருக்கிறேன். இதிலிருந்து லாபம் வந்தால் மட்டுமே இனி திரைப்படங்களைத் தயாரிப்பேன்.

‘ஹிப்ஹாப் தமிழா என்டர்டைமண்ட்’ நிறுவனத்தை இரண்டு பேராக ஆரம்பித்தோம். இப்போது எங்களுடன் 110 பேர் இருக்கிறார்கள். திறமையானவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பளித்துக் கொண்டேயிருக்கிறோம். சினிமாவிற்கு வரும் இளம் தலைமுறையினர்களுக்குப் படிப்பு ரொம்ப முக்கியம்.

ஹிப்ஹாப் ஆதிஹிப்ஹாப் ஆதி

ஹிப்ஹாப் ஆதி

அதனால்தான் திறமையோடு படிப்பும் ரொம்ப முக்கியம் என்று என் ரசிகர்களுக்கு அழுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

சமீபத்தில் கோயம்புத்தூரில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கலந்து கொண்ட நிகழ்ச்சியல் நடந்த நெரிசலால் நடந்த சண்டை சமூகவலைதளங்களில் காணொலியாக வைரலாகியிருந்தது. இதுகுறித்துப் பேசிய ஹிப்ஹாப் ஆதி, “25,000 பேர் அந்த நிகழ்ச்சிக்கு வந்தார்கள். அதில் கொண்டாட்டத்துடன் நடனமாடும்போது ஒரு பத்து பசங்க தள்ளு முள்ளுவில் ஈடுபட்டு சண்டை போட்டுக் கொண்டார்கள். அவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டோம். இந்தச் சண்டை அங்கிருந்த மீதி பேருக்குத் தெரியவே தெரியாது. சமூகவலைதளங்களில்தான் அது பெரிதாகப் பேசப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

கோவை பாரதியார் அரசுப் பல்கலைக்கழகத்தில் ‘Music Entrepreneurship’ என்ற பிரிவில் ‘ஹிப் ஹாப்’ ஆதி பி.எச்.டி முடித்துள்ளார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *