Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!' - ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு! | nimisha sajayan about acting with jyothika

Jyothika: `மை டியர் ஜோ சேச்சி!’ – ஜோதிகாவுடன் நடித்தது குறித்து நிமிஷா சஜயன் நெகிழ்ச்சிப் பதிவு! | nimisha sajayan about acting with jyothika


ஜோதிகா, நிமிஷா சஜயன், ஷாலினி பாண்டே ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற `டப்பா கார்டெல்” வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கிறது.

ஜோதிகாவுடன் இணைந்து நடித்தது குறித்து நிமிஷா சஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் நிமிஷா சஜயன், “ மை டியர் ஜோ சேச்சி! நான் சந்தித்ததில் மிகவும் கனிவான, அன்பு நிறைந்த அற்புதமான நபர் நீங்கள். `டப்பா கார்டெல்’ பயணம் முழுவதும் நீங்கள் எனக்காக செய்த அனைத்திற்கும் நான் உண்மையிலேயே நன்றி கூறவேண்டும். இந்த சீரிஸில் என்னுடைய மாலா கதாபாத்திரத்திற்கு வருணா மேடமாக நீங்கள் இருந்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் சிறந்தவர். என் இதயத்தில் எப்போதும் ஒரு சிறப்பான இடம் உங்களுக்கு இருக்கும்.” என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

இந்தப் பதிவின் கமென்ட்ஸ் பகுதியில் நடிகை ஜோதிகா, “ நிமிஷா, நான் உங்களை நடிகையாகவும் ஒரு நபராகவும் நேசிக்கிறேன். நாம் இருவரும் ஒன்றாக அழகான எமோஷனல் காட்சியில் நடித்தது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்களுக்கு தெரியுமா, நான் உங்களின் `தி கிரேட் இந்தியன் கிச்சன்’ மற்றும் அத்தனைப் படைப்புகளுக்கும் மிகப்பெரிய ரசிகை.” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *