Ilaiyaraaja: ``இளையராஜாவை கொண்டாட அரசு விழா!'' - அறிவித்த முதல்வர்! | MK Stalin Announced Govt Festival to Celebrate Ilaiyaraaja

Ilaiyaraaja: “இளையராஜாவை கொண்டாட அரசு விழா!” – அறிவித்த முதல்வர்! | MK Stalin Announced Govt Festival to Celebrate Ilaiyaraaja


தனது 82-வது வயதில் முதல் சிம்பொனியை உருவாக்கி லண்டனில் அரங்கேற்றம் செய்துள்ளார் இளையராஜா. சிம்பொனி அரங்கேற்றிய தினம் தனது வாழ்நாளில் மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார்.

இளையராஜா சிம்பொனிக்காக தமிழகத்திலிருந்து புறப்படும் முன் அரசியல், சினிமா பிரபலங்கள் பலரும் அவரை சந்தித்து வாழ்த்தினர். அதேப்போல நாடு திரும்பிய அவருக்கு சிறப்பான வரவேற்பும் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளையராஜாவின் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பாக கொண்டாட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

Ilaiyaraaja பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு

இது தொடர்பாக வெளியிடப்பட்ட முதலமைச்சரின் எக்ஸ் தள பதிவில், “லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்துத் திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா அவர்கள், அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்!

ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!” எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இளையராஜாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *