‘ராயன்’, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து இப்படத்தைத் தனுஷ் இயக்கி வருகிறார்.
படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு செட் அமைத்திருக்கிறார்கள்.
ஆண்டிப்பட்டி பகுதியில் அமைத்த இந்த செட் பிரிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது. நேற்றிரவு இந்த செட்டில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்றின் காரணமாக செட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கும் தீ பரவியிருக்கிறது.
அருகிலிருந்த மக்கள் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
இந்தப் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடைபெறாததால் எவருக்கும் எந்த சேதமும் இல்லை எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.