Table of Contents
புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 1 இன்ச்
எலுமிச்சை சாறு – 1
டேபிள் ஸ்பூன் தேன் – 1
டேபிள் ஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்கு கொதித்து, இஞ்சியில் உள்ள சாறு நீரில் இறங்கியதும், அதனை இறக்கி வடிகட்டி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, சிறிது நேரம் மூடி வைத்து, பின் பரிமாறினால், புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகை டீ ரெடி
மூலிகைத் தேநீர்
homemade herbal tea for weight loss
மழை பெய்யும் போது சூடாக ஏதேனும் ( homemade herbal tea )குடிக்க வேண்டுமென்று தோன்றினால், மிகவும் சுவையாகவும், ஆரோக்கியத்தை வழங்கும் மூலிகைத் தேநீர் செய்து குடியுங்கள். இதனால் உங்களுக்கு ஜலதோஷம், இருமல் போன்றவை இருந்தாலும், அதிலிருந்து விடுபடலாம். மூலிகைத் தேநீர் என்றதும் என்ன மூலிகை பயன்படுத்த வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்.
வீட்டில் உள்ள இஞ்சி, எலுமிச்சை, தேன் கொண்டு தான் தயாரிக்கப் போகிறோம். இந்த தேநீர் உடலுக்கு புத்துணர்ச்சியும் வழங்கும். சரி, இப்போது அந்த மூலிகை தேநீரை எப்படி செய்வதென்று பார்ப்போமா!
Related Searches :
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிடங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்.
அஞ்சறைப் பெட்டியில் உள்ள முக்கியமான ஒரு நறுமணமிக்க பொருள் தான் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் சோம்பு விதைகள். இந்த விதைகள் நல்ல மணத்துடன் இருப்பதால், இச்சிறிய விதைகள் வாய் புத்துணர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. அதோடு சோம்பு விதைகள் சில குழம்பு, ஊறுகாய் மற்றும் இனிப்பு பலகாரங்களிலும் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சோம்பு விதைகள் உணவிற்கு நல்ல ப்ளேவரை வழங்குவதோடு, உடல் எடை இழப்பு செயல்பாட்டின் போது உடலுக்கு நன்மை விளைவிப்பதில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றன.
இரு வயதிலோ அல்லது இளம் வயதிலோ நமக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு நம்மை சொட்டை தலையாக ஆக்குகிறது. இதனால் பலரும் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகின்றனர். இதற்கு ஒரு சிறந்த நிவாரண பொருள் தான் இந்த கருஞ்சீரகம். இது நம்முடைய பண்டைய காலத்தில் கூந்தல் வளர்வதற்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் நம்மில் பலருக்கு இந்த கருஞ்சீரகத்தின் மகிமை தெரியாது.