அவர், “ வணக்கம் அய்யா, பாட்டு ரிலீஸாகியிருக்கு. நிறைய பேர் பாடலை ஷேர் பண்றாங்க. இந்த ஃபீல் நல்லா இருக்கு. ” என்றவாரு பேச தொடங்கி தனது பெயருக்கான காரணத்தையும் விளக்க தொடங்கினார். அவர், “நான் மீனவ கிராமத்துல இருக்கேன். இங்க எல்லோரும் என்னை கெளுத்தினுதான் கூப்பிடுவாங்க. நான் மீன் பிடிக்கப் போகும்போது எனக்கு எப்போதும் கெளுத்தி மீன்தான் மாட்டும். அதை வச்சு எல்லோரும் என்னை கெளுத்தினு கூப்பிடுவாங்க. சரி, அதையே நம்ம பெயரா வச்சிடுவோம்னு இந்தப் பெயரை வச்சுட்டேன்.” என்றார்.

“கொரோனா சமயத்துல டிஸ்கார்ட்னு ஒரு செயலி நல்ல பிரபலமாக இருந்துச்சு. அப்போ ஆஃப்ரோ, அசல் கோலாறுனு அட்டிகல்சர்ல இருந்தவங்க அந்த டிஸ்கார்ட்ல பேசுவாங்க. அப்போ நானும் அந்த டிஸ்கார்ட்ல இணைஞ்சு அவங்க பேசுறதை கேட்டுட்டு இருப்பேன். ஒரு நாள் அந்த டிஸ்கார்ட்ல எல்லோரிடமும் அவங்களோட பாடல் அனுப்பச் சொல்லிக் கேட்டாங்க. நானும் அப்போ பண்ணி வச்சிருந்த என்னுடைய பாடலை அனுப்பினேன். அதுக்கப்புறம் ஆஃப்ரோ என்னைக் கூப்பிட்டு பேசினாரு. அப்படிதான் அட்டிக்கல்சரோட என்னோட பயணம் தொடங்குச்சு. ” என்றவர், “ வீடு – ஸ்கூல் – கோவில்…இதுதான் சின்ன வயசுல என்னோட தினசரியாக இருந்தது. எங்க தாத்தா ஒரு சிவன் கோவில் வச்சிருந்தாரு. அங்கப் போய் நான் திருவாசகம், திருப்புகழ்னு சாமி புத்தகங்கள் நிறையப் படிப்பேன். அப்படிதான் என்னோட இசை பயணம் தொடங்குச்சு. கொஞ்ச வருஷம் நான் கர்னாடிக் இசையும் படிச்சேன்.