* காந்தியின் சுயசரிதை நூலின் தலைப்பான `சத்ய சோதனை’ என்கிற பெயரைத்தான் `ஹே ராம்’ படத்திற்கு முதலில் தலைப்பாக வைக்கத் திட்டமிட்டிருக்கிறார் கமல்ஹாசன். அதன் பிறகுதான் `ஹே ராம்’ தலைப்பைத் தேர்வு செய்தார்.
* `ஹே ராம்’ திரைப்படம் தொடங்கும்போது கருப்பு வெள்ளை பதிப்பில் இருக்கும். அதன் பிறகுக் காட்சிகள் வண்ணமயமாகும். நிகழ்காலம் மற்றும் கடந்தகால காட்சிகளை வேறுபடுத்திக் காட்டுவதற்கு இந்த கருப்பு வெள்ளைப் பதிப்பை இயக்குநர் கமல்ஹாசன் பயன்படுத்தவில்லை. நிகழ்காலத்தில் இத்திரைப்படம் தொடங்கி அதன் பிறகு ப்ளாஷ்பேக் காட்சிகளுக்கு நகரும். இறுதியாகக் காந்தி மாய்ந்துவிட்டார் என்கிற செய்தியைச் சாகேத் ராம் அறிந்த பிறகுதான் வண்ணமயமான காட்சிகள் அனைத்தும் கருப்பு வெள்ளைக்கு மாற்றம் பெறும். காந்தி இறந்த பிறகு இந்த உலகம் இருள் சூழந்துவிட்டது என்பதைக் காட்சிப்படுத்தும் குறியீடுதான் இந்த வண்ண மாற்றங்கள்.
* இத்திரைப்படத்தின் மூலமாகத்தான் கமல்ஹாசனின் மகளான ஷுருதிஹாசன் சினிமாவில் களமிறங்கினார். இத்திரைப்படத்தின் வல்லாபாய் படேலின் மகளாக அவர் நடித்திருப்பார். அதுமட்டுமல்ல, இத்திரைப்படத்தின் `ராம் ராம்’ பாடலின் ஒரு பகுதியையும் இவர் பாடியிருப்பார்.
*நவாசுதீன் சித்திக்கும் இத்திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், படத்தின் நீளத்தைக் கருதி அந்தக் காட்சியைக் கத்தரித்திருக்கிறார்கள்.
* 1948-ல் காந்தி சுடப்பட்ட சமயத்தில் அவருடன் இருந்த மோகினி மாத்தூர் என்பவர், இத்திரைப்படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரத்தின் தயாராக நடித்திருப்பார். 1948-ல் மோகினி மாத்தூருக்கு வயது 13.