இது குறித்து ஜி.வி. பிரகாஷ் விகடனுக்கு அளித்த பேட்டியில், “மதயானை கூட்டம் திரைப்படத்துல என்னுடைய பெயர்லதான் பேனர் இருந்தது. ஆனால், அந்தப் படத்துக்கு நான் தயாரிப்பாளர் கிடையாது. எங்க அப்பாவும் இன்னொருவரும்தான் தயாரிப்பாளர். இப்போ தயாரிப்பாளராக என்னுடைய பெயர் இந்த `கிங்ஸ்டன், மென்டல் மனதில்’ திரைப்படங்கள்லதான் வரப்போகுது. இந்த வருடம் தயாரிப்பாளராக அறிமுகமாகவிருக்கேன். நான் இந்த விஷயத்தை பணம் சம்பாதிக்கணும்னு நோக்கத்தோட பண்ணவே இல்ல. அந்தப் படம் என்னென்ன விஷயம் கொடுக்கப்போகுது மக்களுக்கும் இயற்கைக்குதான் தெரியும். நான் ஒரு பேரார்வத்தோடதான் இந்தப் படங்களை தயாரிச்சிருக்கேன். ” எனப் பேசியிருக்கிறார்.
ஜி.வி. பிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய மகள் அன்வி காணொளிக்குள் க்யூட்டாக என்ட்ரிக் கொடுத்தார். ஜி.வி. பிரகாஷ் பேசும் ஒலியை கேட்ட அன்வி மேல் தளத்திலிருந்து “அப்பா…நீ எங்க இருக்க?” எனக் கேட்டார். அதற்கு ஜி.வி-யும் `இங்கதான் இருக்கேன்’ எனப் பதிலளித்தும் `ஓகே, வந்துடுறேன்!’ என ஓடி வந்து ஜி.வியை கட்டி அனைத்துக் கொண்டார். இந்தக் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.