Table of Contents
green pea soup
தினமும் (green pea soup))அல்லது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பச்சை பட்டாணி சாப்பிடுபவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால் செரிமான கோளாறுகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கிறது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – 1 கப்,
பெரிய வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை – 1,
பச்சைமிளகாய் – 1,
பூண்டு – 2 பல்,
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – சிறிது,
பால் – 1/2 கப்.
செய்முறை
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் (green pea soup) வெண்ணெய் சேர்த்து உருகியதும் பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கிய பின்னர் பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்பு பச்சைப் (green pea soup)பட்டாணியை வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேகவைக்கவும்.
பச்சை பட்டாணி வெந்ததும் ஆறவைத்து அதில் இருந்து பச்சைமிளகாய், பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு பட்டாணியை மிக்சியில் போட்டு அரைக்கவும்.
இத்துடன் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு உப்பு, மிளகுத்தூள் தூவி சூடாக பரிமாறவும்.
சத்தான பச்சை பட்டாணி ( green pea soup )சூப் ரெடி.
#green pea soup