நெல்லிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் | Nellikkai benefits

Nellikkai benefits

நெல்லிக்காய் சாப்பிடுங்க அப்புறம் பாருங்க?

நெல்லிக்காய் துவர்ப்பு, ( Nellikkai benefits )புளிப்புச் சுவையுடன் இளம் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதில் உள்ள விட்டமின் C நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களை கட்டுப்படுத்த உதவுகிறது.

நெல்லிக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்;-

நெல்லிக்காய் சாறு , திப்பிலி பொடி ,தேன் மூன்றையும் சேர்த்துக் குழைத்து நாக்கில் தடவி வந்தால் வாய்ப்புண் குணமாகும்
நெல்லிக்காய் சாற்றை வாயில் ஊற்றிக் கொப்பளித்து சிறிது நேரம் வாயிலேயே வைத்திருந்து துப்பினால் பல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.
நெல்லிக்காய், கறிவேப்பிலை இரண்டையும் தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி நரைக்காது
நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி இரண்டையும் 2 கிராம் எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, மூக்கடைப்பு போன்றவை குணமாகும்
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவை மூன்றையும் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் கர்ப்பிணிகளுக்குக் கை கால் வீக்கங்கள் வராமல் தடுக்கலாம்

இவ்வகை மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காவை எப்படி சாப்பிடலாம்?

நெல்லிக்காயை (nellikai benefits in tamil) வெறும் வாயில் சாப்பிடலாம் அல்லது சாறாக்கியும்  குடிக்கலாம். இரண்டு நெல்லிக் காய்களை எடுத்து அதன் விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு அரைத்து 2 டீஸ்பூன் வெல்லம், 1 டீஸ்பூன் தேன், 1 சிட்டிகை உப்பு, 1/4 டீஸ்பூன் சீரகத்தூள் மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, குளிர வைத்தும் அருந்தலாம்.

Nellikkai benefits
Nellikkai benefits

அல்லது, விதை நீக்கிய 10 நெல்லிக்காய்களை எடுத்து, சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். அதில் தேவைக்கேற்ப தேன், இளநீர் சேர்த்துக் குடிக்கலாம்.விதை நீக்கிய நெல்லிக்காய் மூன்று எடுத்துக் கொண்டு சிறு துண்டு தோல் நீக்கிய இஞ்சி, 1 கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அதில் எலுமிச்சைப் பழச்சாறு, தேன், சர்க்கரை கலந்தும் அருந்தலாம்.

தினமும் நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெற்று கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகள் வராது. பற்கள், ஈறுகள் பலம் பெறுவதுடன், வாய் துர்நாற்றம், ரத்தச் சோகை உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சனைகளை போக்குகிறது

மேலும் ,இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு மறும் கொழுப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.காச நோய், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, வாய்வுக் கோளாறு குடல் வாய்வு, மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது. நம் உடலுக்குச் சுறுசுறுப்பு தன்மையை அளித்து உடலில் சேர்ந்துள்ள கழிவுகளை அகற்றி கல்லீரலில் பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும், குடல் புண்களைக் குணப்படுத்தவும், உடல் சூடு குறைக்கவும், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை நிறுத்தவும் உதவுகிறது. 

ஆனால் இவ்வகை (Nellikkai benefits)மருத்துவ குணம் நிறைந்த நெல்லிக்காயை கடைகளில் வாங்கி அருந்துவதால் நெல்லிச்சாறில் தண்ணீரை கலப்பதுடன், அந்த பானம் கெட்டுப் போகாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பென்சாயிக் ஆசிட் (Benzoic acid) மற்றும் அஸ்கார்பிக் ஆசிட் (Ascorbic acid) ஆகியவை சேர்க்கப்படுகிறது. எனவே நெல்லி சாற்றினை நாமே தயார் செய்து குடிப்பது நல்லது.

#nellikai benefits in tamil | #Nellikkai benefits