இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் `குட் பேட் அக்லி”. இப்படத்தில் அஜித்துடன் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். த்ரிஷாவும் இப்படத்தில் நடிப்பதாக தகவல் முன்பே பேசப்பட்டது. தற்போது த்ரிஷா படத்தில் நடித்திருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டிருக்கிறது `மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ தயாரிப்பு நிறுவனம். இப்படத்தில் ரம்யா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார்.
அஜித் நடிப்பில் இம்மாதம் `விடாமுயற்சி’ திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இந்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. அஜித்துடன் த்ரிஷா ‘கிரீடம்’, ‘மாங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’, ‘விடாமுயற்சி’ போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஐந்தாவது முறையாக ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.