Good Bad Ugly: `மார்ச் 18-ல் ஓஜி மாமே!' - படக்குழு கொடுத்த அதிகாரப்பூர்வமான முதல் சிங்கிள் அப்டேட்! | ajith good bad ugly first single on march 18

Good Bad Ugly: `மார்ச் 18-ல் ஓஜி மாமே!’ – படக்குழு கொடுத்த அதிகாரப்பூர்வமான முதல் சிங்கிள் அப்டேட்! | ajith good bad ugly first single on march 18


அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி” திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். அஜித்துடன் நடிகர் சுனில், அர்ஜூன் தாஸ், பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். `விடாமுயற்சி’ திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்திலும் அஜித்துடன் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருக்கிறார். 5-வது முறையாக அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடிக்கும் திரைப்படம் இந்த `குட் பேட் அக்லி’.

Good Bad Ugly First Single

Good Bad Ugly First Single

சமீபத்தில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் படத்தின் முதல் சிங்கிள் குறித்தான அப்டேட்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் கொடுத்து வந்தார். தற்போது படக்குழுவே படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது. `ஓ.ஜி மாமே’ என்ற இப்படத்தின் முதல் பாடல் வருகிற மார்ச் 18-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். படத்தின் டீசர் உருவான விதத்தை ஒரு காணொளியாக வெளியிட்டு அந்த காணொளியின் மூலம் இந்த தகவலை அறிவித்திருக்கிறார்கள்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *