Good Bad Ugly: "படத்தின் வெற்றியை தலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அஜித் சார் சொன்னார்!'' - ஆதிக்

Good Bad Ugly: "படத்தின் வெற்றியை தலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டாம் என அஜித் சார் சொன்னார்!'' – ஆதிக்


அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கிற’குட் பேட் அக்லி’ படத்தை திரையரங்குகளில் மக்கள் கொண்டாடுகிறார்கள். மக்களின் இப்படியான வரவேற்பை தொடர்ந்து ஹைதராபாத்தில் படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.

Good Bad Ugly
Good Bad Ugly

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ரிலீஸுக்குப் பிறகு நான் அஜித் சாரிடம் பேசினேன். அவர் ‘ படம் வெற்றி அடைந்தவிட்டது.

அதை தலையில் எடுத்துக்கொள்ள வேண்டாம். வெற்றியை பற்றிய எண்ணத்தை மறந்தவிடுங்கள். உங்களின் தோல்விகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லாதீர்கள். உங்களுடைய அடுத்த வேலைகளை கவனியுங்கள். தொடர்ந்து கடினமாக உழையுங்கள்.’ என்றார். இப்படியான ஒரு எண்ணத்தைக் கொண்டவர்தான் அஜித் சார்.” என்றவர் அஜித்தின் 64வது படத்தையும் அதிக் இயக்கப்போவாதாக படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு குறியீடு வைத்திருந்தார். அது பற்றி, ” அடுத்த படத்தின் இயக்குநர் பற்றி எனக்கு தெரியவில்லை. அப்படி அஜித் சார் எனக்கு மற்றுமொரு வாய்ப்பு கொடுத்தால் நான்தான் மிகவும் மகிழ்ச்சியான நபராக இருப்பேன். நான் இப்போது இந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

Adhik Ravichandran
Adhik Ravichandran

இந்தப் படத்தில் அனைத்து நடிகர்களின் காட்சிகளும் குறைவாகதான் இருக்கும். அப்படி ப்ரியா வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தெரிந்த முகம் யாராவது நடித்தால் நன்றாக இருக்கும் என திட்டமிட்டோம். ப்ரியாவின் நடன காட்சிகளை மக்கள் கொண்டாடுகிறார்கள். என்னை நம்பியதற்கு நன்றி ப்ரியா.” எனப் பேசினார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *