அதே மாதிரி எனக்கு ஏழு வயது இருக்கும்போது என்னுடைய தந்தை டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.பி.பி, சுசீலா அம்மா பாடல்களையெல்லாம் எனக்கு அறிமுகப்படுத்தினார். மைக்கேல் ஜாக்சன் மாதிரி நம்ம மகனும் வந்தால் எப்படி இருக்கும் யோசிச்சு என்னுடைய தந்தை அவரைப் ஃபாலேவ் பண்ணச் சொன்னார்.
எனக்கும் அவரைப் பிடிச்சு மேடைகள்ல அவர மாதிரியே ஆடிகிட்டே பாடினேன். இலவசமாகவே நிறைய நிகழ்வுகளுக்குப் போய் அவரை மாதிரியே ஆடுவேன். அப்போ அனைவரும் கொடுத்த ஊக்கம் இன்னைக்கு வரைக்கும் என்னை தொடர்ந்து அதே மாதிரி இயங்க வைக்குது.
அதே மாதிரி ‘நீ எவ்வளவு உயரம் போனாலும் அனைவரும் சமம்தான். அனைத்து பகுதிகளுக்கும் போய் நீ ஃபெர்பார்ம் பண்ணனும்’னு என்னுடைய தந்தை எனக்குச் சொல்லி வளர்த்திருக்கார்.
சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா!
இன்னைக்கு நான் அனைத்து மக்களோட நிகழ்வுகளுக்கும் போய் ஃபெர்பார்ம் பண்றேன். குறைவான பணத்துக்கு இன்னைக்கு ஒருத்தர் கூப்பிட்டால் அன்னைக்கு அங்கதான் போவேன். அதே தேதியில திடீர்னு மைக்கேல் ஜாக்சன் கூப்பிட்டாலும் நான் போகமாட்டேன்.” என்றவர், “இன்னைக்கு தமிழ் சுயாதீன இசை ரொம்பவே வளர்ந்திருக்கு. பார்க்கவே சந்தோஷமாக இருக்கு. என்னைப் பற்றிய ஆவணப்படமும் கூடிய விரைவுல வெளியாகுது. அந்த ஆவணப்படத்தை பா.ரஞ்சித்திடம் இணை இயக்குநராக இருந்த விக்ரம் இயக்கியிருக்கிறார். பாருங்க கூடிய விரைவுல சென்னைக்கு வந்தால் சந்திப்போம் யா!” என உற்சாகத்துடன் பேசி முடித்துக் கொண்டார்.