Good Bad Ugly: `அஜித் சாரின் அன்பும் பண்பும் அங்கேயே நீடித்துவிடுகிறது!' -`கே.ஜி.எஃப்' அவினாஷ்

Good Bad Ugly: `அஜித் சாரின் அன்பும் பண்பும் அங்கேயே நீடித்துவிடுகிறது!' -`கே.ஜி.எஃப்' அவினாஷ்


`குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடைசிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு நேற்றோடு நிறைவு பெற்றிருக்கிறது. அஜித் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்ததையொட்டி இயக்குநர் ஆதிக் ரவிசந்திரம் நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவும் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இத்திரைப்படத்தில் நடித்தது தொடர்பாக நடிகர் அவினாஷும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். `கே.ஜி.எஃப்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவினாஷ் சமீபத்தில் வெளியான `கங்குவா’ திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

அவர், “ உங்களுடைய ஹீரோவைச் சந்திக்காதீர்கள் என சொன்னவர்களெல்லாம் அஜித் சார் போன்ற ஹீரோவை சந்தித்திருக்கமாட்டார்கள். அவர் ஒரு அறைக்குள் நுழைவதற்கு முன்பே அவருடைய எனர்ஜி அனைத்து அறைகளுக்குள்ளும் நிறைந்துவிடுகிறது. அவருடைய அன்பும், பண்பும் அவர் சென்ற பிறகும் அந்த அறையிலே நீடித்துவிடுகிறது. இந்தப் படத்தின் வாய்ப்பை எனக்குக் கொடுத்த ஆதிக் ரவிசந்திரனுக்கு நன்றி.

Ge0Rt4MbkAAfQWr Thedalweb Good Bad Ugly: `அஜித் சாரின் அன்பும் பண்பும் அங்கேயே நீடித்துவிடுகிறது!' -`கே.ஜி.எஃப்' அவினாஷ்

இத்திரைப்படம் முழுவதும் அவர் என்னைப் பயன்படுத்திய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசிகர்கள் அனைவரும் இணைந்து அவருடைய ஹீரோவுக்கு முழு அன்பை காட்டும்போது அது மிகவும் சிறந்ததாக வெளிவரும். மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் இது என்னுடைய நான்காவது திரைப்படம். அவர்களுடனான சிறப்பான ப்ராஜெக்ட்ஸும் தொடர்கிறது.” எனப் பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *