GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்' பிரசாந்த் - Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey

GOAT: `Crush’ லிஸ்டில் தவிர்க்க முடியாத`சாக்லேட் பாய்’ பிரசாந்த் – Top Star கரியர் ஓர் பார்வை | goat actor prashanth career journey


ஆம், பிரசாந்த் தன்னுடைய 17 வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். அப்போது இவரின் செல்லப் பெயரே `சாக்லெட் பாய்’தான். அதே சமயம் மற்றொரு பக்கம் விஜய்யும் ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ என ரெமான்டிக் ஹீரோவாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார். இதுமட்டுமல்ல, இவர்கள் இருவரின் படமும் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பான போட்டியும் அப்போதெல்லாம் நிலவியது. இப்படியான பல காரணங்களாலேயே விஜய் மற்றும் பிரசாந்த் ரசிகர்களிடையே அப்போது போட்டி பயங்கரமாக இருந்தது.

எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் பிரசாந்த் அதில் அனாயசமாக அதில் தன்னை பொருத்திக் கொள்வார். கரியரை தொடங்கிய சமயத்திலேயே ஒரு வருடத்தில் ஆறு படங்களில் நடித்த பெருமை இவருக்கு உண்டு! அவருடைய மேனரிசம்தான் அன்றைய நாளில் அவருக்கு தொடந்து ரொமான்டிக் படங்களை தேடிக் கொடுத்தது எனலாம்.

விஜய், தியாகராஜன், பிரசாந்த்விஜய், தியாகராஜன், பிரசாந்த்

விஜய், தியாகராஜன், பிரசாந்த்

அதுமட்டுமல்ல, புதிய முயற்சிகளை எடுத்து ஒவ்வொரு படத்திற்கு தன்னை மெருகேற்றிக் கொண்டே இருப்பார். படத்திற்கு எந்தவொரு விஷயம் தேவையாக இருந்தாலும் அதை உடனடியாக பிரசாந்த் திறம்பட கற்றுவிடுவார். அப்படி பியானோ உட்பட பல விஷயங்களை கற்று வைத்திருக்கிறார். 1994-லிலேயே மணி ரத்னம் முக்கியமான இயக்குநராக வலம் வந்தார். ‘நாயகன்’, ‘தளபதி’ என இரண்டு பிரமாண்ட வெற்றிகளை அவர் அந்த சமயத்தில் கொடுத்திருந்தார். பிரசாந்துக்கு தனது கரியரை தொடங்கிய இரண்டு வருடங்களிலேயே மணி ரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைத்தது. தொடர்ந்து காதல் படங்களில் நடித்தாலும் அதிலும் வெவ்வேறு பரிணாமங்களை காட்டவே பிரசாந்த் முயற்சி செய்தார். ‘ஜீன்ஸ்’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ஜோடி’ போன்ற ஹிட் படங்களை அடுக்கி சாக்லேட் பாயாக அன்றைய கல்லூரி பெண்களின் க்ரஷ் லிஸ்டில் தவிர்க்க முடியாத நபராக இடத்தைப் இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *