GBU: `குட் பேட் அக்லி' படக்குழுவுக்கு வாழ்த்துகள்; God Bless U - விமான நிலையத்தில் ரஜினி

GBU: `குட் பேட் அக்லி' படக்குழுவுக்கு வாழ்த்துகள்; God Bless U – விமான நிலையத்தில் ரஜினி


ரஜினி நடித்திருக்கு ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் சாஹிர் எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்.

JAILER 2
JAILER 2

இதோடு நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்திலும் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ரஜினி பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், ̀̀ ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது. அதனை படக்குழு அறிவித்திருக்கிறது. குமரி ஆனந்தன் மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு தூய்மையான அரசியல்வாதி. அவர் நல்ல மனிதர். ‘கூலி’ப்பிறகு இப்போது ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது.” என்றார். அஜித் நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Coolie
Coolie

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜூன் தாஸ், பிரசன்னா எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் குறித்தான கேள்விக்குப் பதிலளித்த ரஜினி, ̀̀படக்குழுவினருக்கு வாழ்த்துகள். காட் பிளஸ் யூ’ என்றார்.



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *