`நான் வேதனையாக இருந்தநாள்’
இந்த அறிக்கை வெளியானப் பிறகு செல்வமணி நேற்றைய தினம் ஒரு நிகழ்வில் பேசியிருக்கிறார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், “எனக்கு இப்போது 60 வயதைக் கடந்துவிட்டது.
இந்த 60 வருடங்களில் நான் மிகவும் வேதனையாக இருந்தநாள் நேற்றுதான் (மார்ச் 30). என்னுடைய தாய், தந்தையாரை எதிர்த்து நிற்கும்போது எந்தளவுக்கு வேதனைக்கு ஆளானேனோ, அந்த அளவுக்கு நேற்றைய தினம் (மார்ச் 30) வேதனையுடன் இருந்தேன்.
தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு என்னைப் போல நன்மை செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது. இதுவரை பொறுப்பில் இருந்த நிர்வாகிகள், இருக்கும் நிர்வாகிகள் யாரும் அவ்வளவு நன்மைகளை செய்திருக்கமாட்டார்கள்.

சிரமமான சூழல்களுக்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு யாரெல்லாம் எதிரியோ அவர்களை எதிர்பதற்கு எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கிறோம். எந்த ஈகோவும் இல்லாமல் அவர்கள் அழைக்கும்போதெல்லாம் சென்றிருக்கிறோம்.
பல நாட்கள் அவர்கள் அங்கு இல்லாமல் திரும்பியிருக்கிறோம். பல மணி நேரமும் அங்கு காத்திருக்கிறோம். ஆனால், அதைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.
தமிழ் சினிமா சரியான திசையில் செல்வதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றாக இருந்தால்தான் முடியும் என்பதை யோசித்துதான் நான் அதைச் செய்திருந்தேன்.