Eye Problem Solution in Tamil
இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் நிலைக்கு வந்துள்ளோம்.அவ்வாறு இருக்கும் போது நம்முடைய கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது.
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 1 22 dryeye jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/22-dryeye-jpg.webp)
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் கம்ப்யூட்டர் வேலை செய்வது போன்றவற்றால் ஈர்க்கப்பட்டுள்ளனர். அதே சமயம் இன்றய இளைய சமுதாயம் கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் பணிபுரிய தான் ஆசைபடுகின்றனர்(eye problem solution in tamil)..நம்முடைய கண்களுக்கு அதிகம் வேலை கொடுப்பதால் அதனை பாதுகாத்து கொள்வதும் மிக அவசியம். எனவே இந்த பதிவில் நம்முடைய கண்களை எவ்வாறு வீட்டில் இருந்தபடியே பராமரிப்பது என்பதை பார்க்கலாம்.
கண்களின் அவசியம் :
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 2 06 3 eyes jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/06-3-eyes-jpg.webp)
கண்களின் அவசியம் பற்றி நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.கண்கள் இந்த உலகை நாம் காண உதவும் ஜன்னல்களாக உள்ளது.அப்படிப்பட்ட கண்களை பாதுகாப்பது மிகவும் அவசியம்.நம்முடைய கண்கள் குறிப்பாக கோடை காலங்களில் மிகவும் அதிகமாக பாதிப்படையும்.கண்கட்டி,கங்கன் சிவப்பாக மாறுதல்,கண்களில் இருந்தது நீர் வருதல் போன்றவை ஏற்படும்(eye problem solution in tamil).நம்முடைய வீட்டில் இருந்த படியே நம்முடைய கண்களை இயற்கை முறையில் எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை பற்றிய சிறந்த வழிமுறைகளை இங்கு பார்ப்போம்.
கண்களை கழுவ வேண்டும்:
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 3 washing face1 jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/washing-face1-jpg.webp)
சுத்தமான தண்ணீரில் கண்களை கழுவ வேண்டும்.இவ்வாறு செய்வதால் நம்முடைய கண்களில் உள்ள தூசி மற்றும் கண்களில் உள்ள கிருமிகள் நீங்கி கண்களுக்கு பாதுகாப்பை தருகின்றது.கோடை காலங்களில் கண்கள் சிவப்பாக மாறுவதையும் தடுக்க இந்த முறையை பின்பற்றலாம்.
கண் கூசும் ஒளியை தவிர்க்கவும்:
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 4 eye jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/eye-jpg.webp)
அதிகமாக ஒளியை வெளிப்படுத்தும் இடத்தில் இருந்து நம் கண்களை பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்(eye problem solution in tamil).குறிப்பாக அதிகம் ஒளியை தரும் சூரிய கதிர்கள் மற்றும் கண் கூசும் அளவிலான ஒளியை நேரடியாக பார்ப்பதை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அவ்வாறு பார்பதல் அந்த ஒளி நம்முடைய கண்களில் உள்ள ரெட்டினாவை உடனடியாக பாதிக்கும்.
கண் எரிச்சல்:
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 5 cbbdfg uhlan jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/cbbdfg-uhlan-jpg.webp)
கோடைகாலங்களில் கண் எரிச்சல் ஏற்படுவது சகஜம். அவ்வாறு இருக்கும் போது ரோஸ் வாட்டர் எடுத்து அதனுடன் விளக்கெண்ணையை கலந்து பருத்தி துணியால் அதனை தொட்டு கண்களில் இமைகளின் மேல் வைத்தால் கண் எரிச்சல் உடனடியாக சரியாகும்.
கருவளையம் போக:
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 6 eye problem solution in tamil](https://i0.wp.com/www.cybertamizha.in/wp-content/uploads/2018/08/eye-problem-solution-in-tamil2.jpg?resize=600%2C450&ssl=1)
அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் மற்றும் கணினி உபயோகிப்பதாலும் கருவளையம் வரும். இதனால் கண்கள் அழகு இல்லாமல் இருக்கும்.வெள்ளரிக்காயை வட்டமாக நறுக்கி கண்களில் மேல் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் கண்களை சுற்றி உள்ள கருவளையம் நீங்கும்.
இடைவெளி அவசியம்:
இது முக்கியமாக இன்றைய காலகட்டத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும். நம் கண்களுக்கும் தொலைக்காட்சிக்கு இடையே அதிக இடைவெளி அவசியமான ஒன்று. குறிப்பாக கம்ப்யூட்டர் வேலை செய்யும் இளைஞர்கள் அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்வதாகி குறைத்து கொள்ள வேண்டும் இல்லையேல் சிறிது இடைவெளி வெட்டு அமர்ந்து கொள்வது நல்லது.
கண் பயிற்சி:
![கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ் 7 How to Exercise Eyes jpg Thedalweb கண் பிரச்சனைகள் வராமல் இருக்க சிறந்த டிப்ஸ்](https://www.thedalweb.com/wp-content/uploads/2022/12/How-to-Exercise-Eyes-jpg.webp)
இந்த முறையை அனைத்து மருத்துவர்களும் கூறும் ஒரு எளிமையான டிப்ஸ் என்று சொல்லலாம். அதிக நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்யும் நபர்கள் தினமும் சிறிதுநேரம் கண்களுக்கு பயிற்சி அளிப்பது(eye problem solution in tamil). மிகவும் நல்லது. தினமும் 20 நிமிடம் கண்களை மேலே கீழே என அசைப்பது,வட்ட சுழற்சியில் சுழற்றுவது என்று செய்வதால் கண்கள் பாதிப்பில்லாமல் இருக்கும்.
தண்ணீர்:
கண்களுக்கு தேவையான கண்ணீரை நாம் தண்ணீர் குடிப்பதால் தான் கிடைக்கின்றது. எனவே தினமும் அதிகம் தண்ணீரை குடிக்க வேண்டும் இல்லையேல் கண்கள் மட்டுமல்லாது நம்முடைய உடலும் வறட்சியடையும்.