Ilaiyaraaja: `நான் வருகிறேன்'- எந்தெந்த ஊர்களில் இசைக் கச்சேரி? - அப்டேட் கொடுத்த இளையராஜா|ilayaraja music concert announcement

En Iniya Pon Nilave: `அந்தப் பாடலுக்கான உரிமை இளையராஜாவுக்கு இல்லை'- டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு


இளையராஜாவின் இசையில் உருவான `மூடுபனி’ திரைப்படத்தின் `என் இனிய பொன் நிலாவே’ பாடலை தற்போது யுவன் ஷங்கர் ராஜா ரி-கிரியேட் செய்திருக்கிறார்.

இப்பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில், ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் `அகத்தியா’ திரைப்படத்தில் இப்பாடலை ரி – கிரியேட் செய்திருக்கிறார்கள். இப்பாடலின் ஒரிஜினல் வெர்ஷனை பின்னணி பாடகர் யேசுதாஸ் பாடியிருந்தார். தற்போது யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸ் இந்த ரி – கிரியேட் செய்யப்பட்ட வெர்ஷனை பாடியிருக்கிறார்.

`மூடுபனி’ திரைப்படத்தின் பாடல்களின் காப்புரிமை சரிகமப நிறுவனத்திடம் இருக்கிறது. “எங்களிடம் உரிய அனுமதியை பெறாமல் `என் இனிய பொன் நிலாவே’ பாடலை வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் `அகத்தியா’ திரைப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அப்பாடல் குறித்தான அறிவிப்பு வெளியானப் போதிலும் நோட்டீஸ் அனுப்பியிருந்தோம். அதையும் மீறி அப்பாடலை வெவ்வேறு தளங்களில் வெளியிட்டுள்ளனர்.” என சரிகமப நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இளையராஜா
இளையராஜா

இதற்கு பதிலளித்த வேல்ஸ் நிறுவனம், “ `என் இனிய பொன் நிலாவே’ பாடலை ரி – கிரியேட் செய்வதற்கு அப்பாடலை இசையமைத்த இளையராஜாவிடம் காப்புரிமையை பெற்றுவிட்டோம்.” எனக் கூறியிருக்கிறது. உண்மையாகவே காப்புரிமை யாரிடமிருக்கிறது என்பதை ஆராய்ந்து தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. “என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமை சரிகமப நிறுவனத்திடம்தான் இருக்கிறது. ஆதலால் அதற்கான உரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது.” என தீர்ப்பளித்திருக்கிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/MadrasNallaMadras

WhatsApp Image 2024 11 18 at 16.55.14 Thedalweb En Iniya Pon Nilave: `அந்தப் பாடலுக்கான உரிமை இளையராஜாவுக்கு இல்லை'- டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு



Source link

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *