அஸ்வத் மாரிமுத்துவின் முந்தைய படமான ஓ மை கடவுளே திரைப்படமும் ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றது. பிரதீப் ரங்கநாதனும் லவ் டுடே என்ற ஹிட் படத்தைத் தொடர்ந்து டிராகனில் நடித்திருந்ததால், இந்த படத்துக்கு முன்னரே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த நிறைவில் உள்ள படக்குழுவினரை இன்னும் சந்தோஷப்படுத்தியிருக்கிறது நடிகர் ரஜினிகாந்தின் வாழ்த்து.
“டிராகன்’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினி, இயக்குநர் அஸ்வத், பிரதீப், தயாரிப்பாளர் அர்ச்சனா ஆகிய மூவரையும் நேரில் தனது இல்லத்திற்கு அழைத்துப் பாராட்டியிருக்கிறார்